பருத்திக்கொட்டை லேகியம்
தாளக பற்பம் 2 செய்முறை : சுத்தி செய்த பொன்னரிதாரம் 35 கிராம் , பொரிக்காத வெங்காரம் 35 கிராம் , ஒரு புது மண் குடுவையில் 17 1/2 கிராம் வெங்காரம் பரப்பி ,அதின் மேலே தாளகம் வைத்து மீதமுள்ள வெங்காரத்தால் தாளகத்தை முடி மேல் அகல் முடி சீலைமண் 3 செய்து உலர்த்தி 5 to 6 எருவிற்கு மத்தியில் வைத்து புடமிடவும்.புடம் ஆறியபின் எடுக்க பஷ்பித்திருக்கும்,தாளகம் மட்டும் சுரண்டி கல்வத்திலிட்டு 1 மணி நேரம் அரைத்து,பின்னர் மீதமுள்ள வெங்காரத்தையும் சேர்த்து 1 மணிநேரம் அரைத்து சேர்த்து வைத்துக்கொள்ளவும். அரிசி எடை முதல் குன்றி அளவு வரை தேனில் காலை மாலை உணவிற்கு பின்பு 7 நாள்கள் சாப்பிட்டு வர சுவாச சம்பந்த பல நோய்கள் தீரும் .தொடர்ந்து சாப்பிட்டுவர நாட்பட்ட நோய்கள் தீரும்.
காசம் ,
இருமல் ,
ஆஸ்துமா ,
கஷ்ட சுவாசம் ,
மூச்சு திணறல் தீரும்,
இலிங்கக்கட்டு :
ஒரே கட்டியாக உள்ள லிங்கம் 50 கிராம் to 10 கிராம் இதை 10 நாட்கள் தாய்ப்பாலில் ஊறவைத்து தண்ணீரில் கழுவி எடுத்து ஈரம்போக துடைத்து எடுக்கவும் இது லிங்க சுத்தி . அல்லது பசும்பாலில் 3 நாட்கள் ஊறவைத்து நீரில் கழுவி எடுக்கலாம்.
மேற்படி சுத்திசெய்த லிங்ககிக்கட்டி 100 கிராம்,
கட்டி சாம்பிராணி 100 கிராம்,
கட்டி கற்பூரம் 100 கிராம் ,
சதுரகாடாத்துணி 10 no's ,
கற்பூரமும் ,சாம்பிராணியும் தனித்தனியே தூள் செய்து 10 சம பாகங்களாக பிரித்து,பின்னர் ஒவ்வொரு பங்காக சிறிது வேப்பப்பெண்ணை விட்டு மெழுகுபோல அரைத்து காடாத்துணியில் பூசவும்.
ஒரு காற்றில்லா இடத்தில ஒரு அகலில் ஒரு காடாத்துணியுடன் உள்ள மெழுகை லிங்கத்தின் மேலே கவசித்து கற்பூரம் கொண்டு நெருப்பிடவும்.15 நிமிடத்துக்குள் எரிந்து அடங்கும்.பின்னர் மீண்டும் மற்றொரு கவசம் லிங்கத்தின் மேலே சுற்றி இதுபோல் எரிக்கவும்.இப்படி பத்து முறை செய்யவும்.லிங்கம் கட்டிவிடும்.
ஆறியபின்னர் லிங்கம் மேலே பற்றி உள்ள கரியை கத்திக்கொண்டு சுரண்டவும்.பின்னர் கல்வத்திலிட்டு 1 மணிநேரம் அரைக்கவும் நன்கு மிருதுவான செந்தூரமாக இருக்கும்.கல்காரக் புட்டியில் பத்திரப்படுத்தவும்.
அரிசி எடை தேனுடன் கலந்து தர வாய்வு போகும்.
திரிகடுகில் அரிசி எடை செந்தூரம் வைத்து சாப்பிட நெஞ்சடைப்பு ,
வாய்வு ,
மூர்ச்சை ,
வயிறு பேதி ,
வயிறு ஊதல் முதலியன தீரும்.
இஞ்சிச்சாற்றில் தர சூலை ,பித்தபாண்டு தீரும்,
சித்திரமூல வேரின் கஷாயத்தில் கொடுக்க பலவகை நோய்கள் குணமாகும்.
ரசகற்பூர சுத்தி :
தாய்ப்பால்,அல்லது நாட்டு பசும்பாலில் 10 நாட்கள் ஊறவிட்டு துடைத்து உலர்த்தவும்.
வெள்ளைப்பூண்டு தைலத்தில் 3 சாமம் சுறுக்கு கொடுக்கவும்.
ஒரு புது மண் சட்டியில் 175 கிராம் வெடியுப்பை பொடித்து போட்டு அதன் மேலே ரசகற்பூரக்கட்டியை வைத்து மேலும் 175 கிராம் வெடியுப்பை போட்டு 5 நாட்டுகோழிமுட்டையை உடைத்து ஊற்றவும்.
6 நிமிடம் கமலாக்கினியாக எரிக்க முட்டை வெந்து வெடியுப்புடன் சேர்ந்து எரிந்து அடங்கும்.சட்டியை உடைத்து உப்பை நீக்கி பூரத்தை மட்டும் தனியாக பிரித்து எடுக்கவும்.இதுவே ரசகற்பூரக்கட்டு.
தீரும் நோய்கள் :
சந்நி ,சுரம் ,நாவறட்சிக்கு திரிகடுகு சூரணத்தில் அரிசியிடை பூரக்கட்டை வைத்து 5,7,9,நாட்கள் கொடுக்கலாம்.
வாதநோய்களுக்கு முன் சொன்ன லிங்க கட்டுடன்,பூரக்கட்டும் சேர்த்து அரிசியிடை காலை வெறும் வயிற்றில் இஞ்சிச்சாறு தேன் கலந்து குடிக்கலாம்.
காடை களிம்பு :
காடை இரத்தத்தை மயிர்உதிர்கின்ற இடங்களில் பூசிவர மயிர் உதிர்வது நிற்கும்,அங்கு மயிர் செழித்தும் வளரும். காடை எலும்பை சுட்டு கரியாக்கி ,பொடித்து வஸ்திரகாயம் செய்து (துணியில் சலித்து ) நல்லெண்ணையில் மத்தித்து களிம்பாக செய்து வைத்துக்கொண்டு மயிர் முளைக்க வேண்டிய இடங்களில் பூசிவர முடி முளைக்கும்.
பூச்சி வெட்டு ,
புழுவெட்டு ,
வழுக்கை ,
சொட்டை ,
சர்ப்ப வெட்டு
மீசை முளைக்க
தாடி வளர
தம்பனக் குளிகை :
ஆளிவிதை பொடி 12 கிராம் ,
கசகசா கருக்கியது 12 கிராம் ,
குங்குமப்பூ(ராமாயன் பிராண்ட் ) 2 கிராம் ,
வறுத்த சாதிக்காய் 2 no's ,
தேன் தேவையான அளவு ,
கல்வத்திலிட்டு நன்கு குங்குமப்பூவை அரைத்து எடுத்து தனியே வைக்கவும்.பிறகு கசகசா கருக்கியதை கல்வத்திலிட்டு நன்கு அரைத்து குங்குமப்பூ ,சாதிக்காய் ,ஆளிவிதைப் பொடி அனைத்தையும் சேர்த்து தேன் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு அரைக்கவும்,மருந்து கல்வத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்போது கடலை அளவு முதல் இலந்தை பழம் அளவு மாத்திரைகளாக பிடித்து உருட்டவும்.
உபயோகிக்கும் முறை :
மாலை ஒரு மாத்திரை வெற்றிலையுடன் மென்று சாப்பிட்டு பசும்பால் குடிக்கவும்.வீரிய விருத்தியும்,விந்து தம்பனம் ஆகும்,தாது வலுக்கும்.இடுப்பு வலுவு உண்டாகும்.
விந்து தம்பன மாத்திரை :
முருங்கை விதை 50 கிராம்,
பூனைக்காலி விதை 50 கிராம்,
நிலப்பனை கிழங்கு 50 கிராம், ,
பூமிசர்க்கரை கிழங்கு 50 கிராம்,
தாமரைவிதை 50 கிராம்,
தேற்றான் விதை 50 கிராம்,
வெங்காயவிதை 50 கிராம்,
முள்ளங்கி விதை 50 கிராம்,
சந்தன தூள் 50 கிராம் ,
ஜாதிக்காய் 50 கிராம் ,
ஜாதிலிங்கம் 50 கிராம்,
இவைகளை சுத்தி செய்து பொடித்து சலித்து ,ஒன்றாக சேர்த்து தேங்காய் பாலால் 4 சாமம் அரைத்து கடலை அளவு மாத்திரைகள் செய்து நிழலில் உலர்த்தவும்.
சாப்பிடும் முறை :
காலை உணவிற்கு முன்பும் ,இரவு உணவிற்கு பின்னும் சாப்பிட்டு பசும்பால் கற்கண்டு சேர்த்து சாப்பிடவும்.உணவில் புளிப்பு வஸ்துக்களை நீக்கவும்.20 நாள்கள் சாப்பிடவுடனே விந்து கட்டும்.
நீடித்து சாப்பிட உடலில் நல்ல தேஜஸ் உண்டாகும் ,
சோர்வு நீங்கும்,ஞாபக சக்தி பெருகும்,
குண்டிக்காய் ,பீஜம் இவைகளுக்கு வலுவை தரும்.
வாலிபம் என்றும் இருக்கும் .
பலவீனம் அணுகாது.
எந்த நேரமும் போக இச்சை உண்டு.
குரல் மாறியது குணமாக
ஆடாதோடை ,திப்பிலி ,கோஷ்டம் ,சுக்கு ,கடுக்காய் இவையாவும் சம எடை( 50gm ) வறுத்து பொடித்து சலித்து பத்திரப்படுத்தவும்.காலை மாலை வெருகடி அளவு 4gm அளவு தேனுடன் அல்லது நெய்யுடன் கலந்து உணவிற்கு பின்பு சாப்பிடவும்.இப்படி 40 நாட்கள் சாப்பிட நல்லஒலி உண்டாகும்.
கெந்தி பவள பற்பம்: (நச்சு சுரம்,சளிசுரம் நீங்க)
பாலில் 7 முறை சுத்தி செய்த கெந்தகம் 25 கிராம்,
பவள பற்பம் 25 கிராம்,
ஆமையோட்டு பற்பம் 25 கிராம்,
அண்ட ஓட்டு பற்பம் 25 கிராம்,
சிலாசத்து பற்பம் 25 கிராம்,
வெள்ளை வெங்காயச்சாறு 500 ml ,
செய்முறை :
நெல்லிக்காய் கெந்தி முதல் அனைத்து பற்பங்களையும் ஒன்றாக சேர்த்து வெள்ளை வெங்காயச்சாறு சிறிது சிறிதாக ஊற்றி அரைத்து தட்டில் பரப்பி நன்கு வெயிலில் காயவைத்து பொடித்து பத்திரப்படுத்தவும்.
சாப்பிடும் முறை :
300 முதல் 600 மில்லிகிராம் பற்பத்தை வெந்நீரில் நாளொன்றுக்கு இரண்டு ,மூன்று முறையோ அல்லது அதற்கு மேலும் தேவைக்கேற்ப கொடுக்கலாம்.
தீரும் நோய்கள் :
நச்சு சுரம் ,சளி சுரம் ,அண்ணாக்குத்தூறு அழற்சி போன்ற நுண்கிருமிகளால் பரவும் பிணிகள் தீரும்.
நவசாரப் பதங்கம் :
கட்டி ஓட்டு நவச்சாரத்தை ஒரு முறை நீரில் அலசி எடுத்து உடனே துணியால் துடைத்து கல்வத்தில் நன்கு பொடித்து ஒரு மண் அகலில் பரப்பி அதற்கு தகுந்த மண் சட்டி முடி சீலைமண் செய்து உலர்த்தி 3 மணிநேரம் to 8 மணி நேரம் எரித்து சூடு ஆறிய பின்பு எடுத்து பிரித்து பதங்கத்தை மயிர் குச்சியால் துடைத்து எடுத்து,அதன் எடைக்கு 5 மடங்கு தேன் விட்டு அரைத்து பத்திரப்படுத்தவும்.வேண்டும் போது உள்நாக்கு கழலையின் மீதோ,தொண்டையுள் வளரும் துன்மாங்கிச கழலை மீதோ ஒரு குச்சியில் பஞ்சை சுற்றி அந்த பஞ்சால் மருந்தை தொட்டு கழலையின் மீது தடவவும்.சிலநாட்களில் 100%கரைந்துவிடும்.மாலையும் ,இரவும் மருந்து போடவும்.
ரசபூபதி செந்தூரம்.
வெள்ளீயம் 5 கிராம் ,
வாலை ரசம் 10 கிராம் ,
சுத்திசெய்த கெந்தகம் 20 கிராம் ,
காந்த செந்தூரம் 40 கிராம் ,
அயச்செந்தூரம் 80 கிராம் ,
வெள்ளீயம் சுத்தி :
எருமை சாணியில் 7 முறை உருக்கி சாய்க்கவும்.
செய்முறை :
வெள்ளீயத்தை உருக்கி ரசம் தொந்திக்கவும்,கெந்தகம் சேர்த்து கருப்பாகும் வரை அரைத்து,காந்த செந்தூரம் சேர்க்கவும்,அதன் பின்னர் அயச்செந்தூரம் சேர்த்து குமரி வேர் இடித்து பிழிந்த சாற்றால் அரைத்து வெண்கல தட்டில் பூசி வெய்யிலில் காயவைக்க லேசாக புகைந்து செந்தூரமாகும்.அதை மறுபடியும் 2 முறை அரைத்து வெய்யிலில் காயவைக்கவும்.
சாப்பிடும் அளவு :
3 குன்றியளவு முதல் 5 குன்றியளவு செந்தூரத்தை 8 மடங்கு திரிகடுகு சூரணத்துடன் கலந்து வேண்டிய தேன்விட்டு குழைத்து உணவிற்கு முன்பு காலை,மாலை சாப்பிடவும்.
தீரும் நோய்கள் :
பக்கவாதம் ,கணுவாதம் ,ரத்தமின்மை ,பாண்டு ,நீர்க்கட்டு ,பசியின்மை முதலியன தீரும். (60 வயதுள்ள ஒருவருக்கு பக்கவாதம் இருந்தது,40 நாட்கள் மேற்படி மருந்து சாப்பிட்டு பூரண குணம் கண்டது பலராமையா அனுபவம்.)
துருசு கட்டு (சுக்கான் துருசு சுண்ணம் 2):
துருசை ஒரே கட்டியாக எடுத்து சுண்ணாம்பு தடவிய துணியால் 3 கவசம் செய்து சூரிய வெப்பத்தில் காயவைக்கவும்.வங்கத்தை குகையில் வைத்து உருக்கி அதில் சுண்ணாம்புச் சீலை சுற்றிய துரிசை ஒரு சாமம் மூழ்கவைத்து பார்த்தால் துருசு கசடு நீங்கி வெண்மையாக இருக்கும்.அதை சூடு ஆறவிட்டு மறுநாள் நீற்றிய சுண்ணாம்புடன் வெங்காரம் சேர்த்து அரைத்து சீலை செய்யவும்.அதை வராக புடமிட குருவாகும்.விராலி இலை இடிக்கும் போது சிறிது (.488 mg )சேர்த்து இடித்து துணியில் வைத்து இறுக்கி பிழிய சாறுவரும். இந்தச்சாற்றில் பாதரசம் வைத்து எரிக்க ரசம் வெண்ணைபோல ஆகும்.அதை குளிர்ந்த நீரில் ஊறவைக்க ரசம் கட்டும்.இவ்வாறு கட்டிய ரசத்தை மத்தன் காய்க்குள் வைத்து புடமிட 100 புடமிட ரசக்கட்டு தங்கத்தைப்போல் கண்விட்டாடும்.அப்போது தங்கமும் நாகமும் சரியிடை சேர்த்து களங்கு ஆகும். நவலோகம் தங்கமாகும். இதை செந்தூரம் செய்து வாழைப்பழத்துடன் பணவெடை வைத்து சாப்பிட உடல் குளிர்ச்சி உண்டாகும்.
உடல் பொன் நிறம் பெறும்.மலை போன்ற உறுதியான உடலாகும்.கிழவனும் குமாரனாவான் இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
கீழாநெல்லித் தைலம் :
கீழாநெல்லி சமூலம் நிழலில் உலர்ந்தது 1400 கிராம்,
நல்லெண்ணெய் 1 படி ,
கடுக்காய் தோல் 18 கிராம்,
வேப்பம் பிசின் 18 கிராம்,
நாட்டு சர்க்கரை 18 கிராம்,
8 படி (11.520 ml ) நீரில் கீழாநெல்லி சமூலத்தை சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு கொதிக்கவைத்து 1 படியாக வற்றக்காய்ச்சி வடிகட்டிய கசாயத்தில் கடுக்காய் தோல் பொடியையும் ,வேப்பம் பிசின் பொடியையும் பால்விட்டரைத்து கலக்கி அதன் பின்பு 1படி நல்லெண்ணெய் சேர்த்து சிறுதீயாக காய்ச்சி வண்டல் மெழுகுபதம் வரும்போது நாட்டு சர்க்கரை தைலத்தில் பரவலாக தூவி கிண்டி ஆறவைத்து வடிகட்டி புட்டியில் அடைக்கவும்.
உபயோகிக்கும் முறை :
வாரம் ஒரு நாள் அல்லது இரு நாட்கள் சிரசில் 30 மில்லி தைலத்தை சூடு பறக்க தேய்த்து ஒரு மணிநேரம் சென்ற பிறகு வெந்நீரில் சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.
தீரும் நோய்கள் :
பித்த பயித்தியம் ,
கண்ணெரிச்சல் ,
வாய்நீரூரல் ,
கை,கால் எரிவு ,
பித்த கிறுகிறுப்பு ,
எரிபித்தம்.முதலிய உஷ்ண நோய்கள் அனைத்தும் நீங்கும்.
குழந்தைகளுக்கு வசம்பு சூரணம் :
5 பெரிய வசம்பு துண்டுகளை 35 கிராம் பெருங்காயத்தை நீர்விட்டு அரைத்து வசம்பின் மேலே பூசவும்.அரை மணிநேரம் சென்றபின்பு அகலில் அடக்கி மேலகல் முடி சீலை மண் செய்து 10 எருவில் புடமிடவும்.புடம் ஆறிய பின்பு எடுக்க வசம்பு பற்பமாகி இருக்கும்.அதை கல்வத்திலிட்டு நன்கு அரைத்து புட்டியில் அடைக்கவும்.
குழந்தைகளுக்கு மிளகு அளவு பற்பத்தை தேன் அல்லது நெய்யுடன் குழைத்து காலை, மாலை கொடுத்துவர வாந்தி ,கழிச்சல் ,கிராணி ,எலும்புருக்கி முதலியவை தீரும்.
பசி அதிகரிக்கும் ,ஜீரண சக்தி உண்டாக்கும்,குழந்தைகளை நன்றாக வளர்க்கும்.தேகம் பூரிக்கும்.
மதுரை சித்த வைத்திய சங்கத்தின் 93வது ஆண்டுவிழா தொடர்ப்புக்கு :
செயல் தலைவர் :
சோலைமலை S .வரதராஜன். R.S.M.P, D.N.Y.S.(98420 45587).
தலைவர் :
S .அப்துல் ஜப்பார். R.S.M.P. (98421 68829).
செயலாளர் :
S .குருநாதன். D.N.Y.S. (98430 95673).
குழந்தைகளுக்கு சுகபேதி சூரணம் :
சுத்திசெய்த சிவதை வேர் பொடி 25 கிராம் ,
பொடித்த இந்துப்பு 25 கிராம் ,
செவ்வியம்(மிளகு கொடி வேர் ) 25 கிராம் ,
இவைகளை ஒன்று கூட்டி கல்வத்திலிட்டு மிருதுவாகும்படி அரைத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொள்ளவும்.
சாப்பிடும் முறை :
6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை (இரண்டு விரல்களால் எடுக்கும் அளவு )வெந்நீரில் கரைத்து கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்கு கொடுக்கவும். 2,3 முறை பேதியாகும்,அல்லது வாந்தியாகி கபத்தை வெளிபடுத்தும். குழந்தை வயது உடல் வலிமைக்கு தகுந்தாற் போல மருந்தை கூட்டியும்,குறைத்தும் கொடுக்கலாம்.
தீரும் நோய்கள் :
மலச்சிக்கல் நீங்கும்.வாத , பித்த, கபத்தை ஒழுங்குபடுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கும்.உடலில் எந்த நோயும் எளிதில் வராமல் தடுக்கும்.
குழந்தைகளுக்கு கற்ப மிளகு சூரணம் :
100 கிராம் மிளகை வேலிப்பருத்திசாற்றில் 24 மணி நேரம் ஊறவைத்து வெயிலில் உலர்த்தி காய்ந்தபின் இடித்து சலித்து சூரணம் செய்து காற்று புகாத புட்டியில் அடைக்கவும்.
இதுவே கற்ப மிளகு சூரணம்.
சாப்பிடும் முறை :
குழந்தைகள் தயிர் ,பால் போன்று வாந்தி எடுத்தல் ,
மந்தம் ,
கைகால் சில்லிடுதல் ,
சுரம் ,
வயிற்று பக்கம் பள்ளம் விழும் அள்ளு மாந்தம்,
அஜீரண பேதி,
வயிறு உப்பும் மாந்தம்,
இழுப்பு
முதலிய சகல வியாதியும் போக்கும்.
குழந்தைகளுக்கு 2 to 4 அரிசியிடை தேனில் அல்லது பாலில் கொடுக்கவும்.
பெரியவர்களுக்கு திரிகடி அளவு தேனுடன் தரவும்.
அஜீரணம்,
வயிற்று வலி,
அஜீரண பேதியால் வயிற்றில் வாயு தங்கி இரைச்சலிடுதல்,
வயிற்று நோய்கள்,இவற்றை நீக்கி பசி தீபனத்தை உண்டாகும்.
கழற்சி சுண்ணம் :
கழற்சிகொட்டைகளை ஓடு அகற்றி பருப்புகளை இளம்வருப்பாய் வருத்து இடித்து சலித்து ,இஞ்சிசாற்றால் அரைத்து வில்லை தட்டி வெயிலில் ஒரு நாள் உலர்த்தி 4 படி உமியில் வைத்து மூடி கற்பூரத்தால் பற்ற வைக்கவும்.3 நாள்கள் கழித்து மெதுவாக உமி கருகல்களை நீக்கி பார்க்க வெண்மை நிறத்தில் நீறி சுண்ணமாகி இருக்கும்.சில வில்லைகள் செந்தூரித்து இருக்கும்.சில வில்லைகள் கறுத்திருக்கும்.சுண்ணம் மட்டும் தனியே எடுத்து வைக்கவும்.
செந்தூரம்,கருப்பு முதலியவைகளை சேர்த்து அரைத்து புட்டியில் அடைக்கவும்.
தேனிலாவது ,வெண்ணெயிலாவது இம்மருந்துகளை உளுந்து அளவு 5 or 7 or 9 நாட்கள் கொடுக்க விரைவாதம்,நரம்பு சுருள் நோய்கள்,அடிவயிறு வீக்கம்,குடல் பிதுக்கம் ,குடலிறக்கம் முதலியவை நீங்கும் .
வீர பாஷாணத்தில் ரசம் பிரிக்கும் முறை :
ஒரு இரும்பு சட்டியில் 2 இளநீரின் நீரை ஊற்றி அதில் வீரத்தை பொடித்து போட்டு 4 ல் ஒன்றாக வற்றக்காய்ச்சவும்.அச்சமயம் அலுமினிய தாள் ஒன்றை அந்த நீரில் போட்டு கரைக்கவும்.வீரத்தில் உள்ள ரசம் சட்டியில் தங்கிவிடும்.மேலும் கொஞ்சம் நீர் வற்ற எரித்து ரசத்தை மட்டும் பிரிக்கவும்.இதுவே வீர ரசம்.
கொச்சி வீரம் ,
கோடோசூரி வீரம் ,
சவ்வீரம்,
வீர ராஜன்.
வீர ரசம்
லிங்க பாஷாணத்தில் ரசம் பிரிக்கும் முறை :
லிங்கம் 100 கிராம் ,
கொடிவேலிவேர் 100 கிராம்,
இரண்டு புது சட்டிகளை உராஞ்சி சேர்த்து பார்த்த பின்பு,அதனுள் பொடித்த லிங்கத்தையும்,கொடிவேலி பொடியையும் சேர்த்து அரைத்ததை போட்டு மூடி , 3 முதல் 7 செய்து உலர்த்தி ,அடுப்பேற்றி 5 நேரம் கமலாக்கினியாக எரித்து எடுக்க லிங்கத்தின் எடைக்கு பாதி (50 gm )வாலைரசம் கிடைக்கும்.
இரண்டுமுறை கெட்டியான துணியில் பிழிந்து நீரில் கழுவி எடுத்து வைக்கவும்.
வாலை ரசம் ,
லிங்க ரசம் ,
சுத்தித்த ரசம் ,
லிங்க ரச வாலை
ரசகற்பூர சுத்தி :
தாய்ப்பாலில் ஒரு நாள் ஊறவைத்து உலர்த்தவும்.அல்லது பசும்பாலில் ஒரு நாள் ஊறவைத்து உலர்த்தவும்.
திருமூர்த்தி பதங்கம் செய்முறை :
லிங்க ரசம் 40 கிராம் ,
வீர ரசம் 40 கிராம் ,
ரச கற்பூரம் 40 கிராம் ,
இவை மூன்றையும் கல்வத்திலிட்டு 6 மணிநேரம் அரைக்கவும்,
ஒரு பதங்க சட்டியில் 4 படி உப்பை தெறிப்படங்க வறுத்து கீழ் சட்டியில் பாதி போட்டு அதில் சிறிது பள்ளம் செய்து மேற்படி லிங்கரசம்,வீர ரசம்,ரசகற்பூர கலவையை போட்டு மேலும் உப்பைப்போட்டு மேல் சட்டியை கவிழ்த்து மூடி 7 சீலைசெய்து உலர்த்தி 40 மணிநேரம் தொடர்ந்து எரிக்கவும்.சூடுஆறவிட்டு பிரித்து பார்க்க மேல் சட்டியில் பழுப்பு நிறத்தில் மினுமினுப்பான பதங்கம் காணும் இதுவே திருமூர்த்தி பதங்கம்.
பணவெடை பற்பத்தை பனை வெல்லத்தில் நடுவில் வைத்து ஒரு மண்டலம் காலை மாலை விழுங்க கீழ்கண்ட நோய்கள் அனைத்தும் தீரும்.
குட்டம் 18,
குன்மம் 8,
வாதம் 80,
பித்தம் 40,
காசம் ,
விஷப்பாண்டு ,
விஷ பேதி ,
கிராணி , முதலிய இன்னும் பலநோய்களையும் தீர்க்கும்.
புண்கள் ஆற்றும் களிம்பு :
1.மஞ்சட் கௌரி பாஷாணம் 5 gm ,
2.மிருதார் சிங்கி 5 gm,
3.மயில்துத்தம் 9 gm,
4.தாளகம் 9 gm,
இவைகள் சுத்திசெய்ய அவசியமில்லை.ஒன்றன் பின் ஒன்றாக கல்வத்தில் நன்கு அரைத்து, நல்லெண்ணெய் சிறிது சிறிதாக விட்டு அரைத்து குழம்பு பதத்தில் தண்ணீர் 200 ml விட்டு நன்கு அரைத்து,கரும்பச்சை நிறமாக தண்ணீர் பின்னர் அதை ஊற்றிவிட்டு களிம்பை மட்டும் பத்திரப்படுத்தவும்.வேண்டும்போது ஒரு துணியில் சிறிது களிம்பை தடவி புண்கள் மேல் போடவும்.புண்கள் விரைவில் ஆறி உலரும்.
ரத்த சிங்கி (சிவப்புநிறமாக நீர்கசியும் புண்கள் ),
குழி ரணங்கள்,
மார்பு சிலந்திகள்,
நீர் கசியும் கட்டிகள்,
கழலைகள் ,
ஆறாத புண்களும் ஆறும்.
துருசு பற்பம் (காளான் சாறு ).
200 gm வெளுக்க வறுத்த துருசை காளான் சாற்றில் கலந்து 7 நாட்கள் வெயிலில் காயவைக்கவும். நன்கு காய்ந்தபின்பு அகலில் அடக்கி மேலகல் மூடி சீலைமண் செய்து 10 to 20 எருவில் புடமிடவும்.துருசு பற்பமாகும்.அகலில் அண்டச்சுண்ணம் (முட்டை ஓட்டு சுண்ணம் சிறிது நீரில் கலந்து பூசி உலர்ந்தபின்பு வில்லைகளை வைத்து புடமிட நன்று )
புடம் போட்ட துருசு மஞ்சளும் ,கருப்பும் கலந்த நிறத்தில் இருக்கும்.இந்த பற்பத்தை மேலும் இதே சாற்றால் 2, 3 புடங்களிடலாம்.
இந்த பற்பம் வயிற்றுப்புண் ,தோல்நோய்களை(புற்றுகள் முதல் குஷ்டநோய் வரை ) கண்டிக்கும்.
அரிசி எடை நெய்யில் சாப்பிடவேண்டும்.3 நாட்கள் மட்டும் காலை மாலை இரு வேளைகள்.
துருசுச் சுண்ணம்: (வீரம் சேர்ந்த )

புடம் போட்ட துருசு மஞ்சளும் ,கருப்பும் கலந்த நிறத்தில் இருக்கும்.இந்த பற்பத்தை மேலும் வீரம் சரி எடை சேர்த்து காளான் சாற்றால்அரைத்து 20 எருவில் புடம் போட சுண்ணம்.
இது மஞ்சளுக்கு சிவக்கும்.சாறு வராத மூலிகைகளில் இதை சிறிது சேர்த்து இடித்து பிழிய சாறு வரும்.
இது ஒரு குரு சுண்ணம்.
குரு சுண்ணம் ,
நீலன் சுண்ணம் ,
துருசு குரு ,
துருசு குரு ,
குருமருந்து ,
சிவ சுண்ணம்.
துருசு சுண்ணாம்பு.
சிரட்டைத் தைலம் :
20 to 30 நன்கு காய்த்த தேங்காய் சிரட்டைகளை சிறிய துண்டுகளாக உடைத்து ஒரு குளித்தைல பாத்திரத்தில் போட்டு 50 to 80 எருவில் புடமிட்டு எடுக்க கெட்டியான சிரட்டைத் தைலம் கிடைக்கும்.
உபயோகிக்கும் முறை :
வேண்டும்போது சிறிது தைலத்துடன் சமன் தேங்காய் எண்ணெய் கலந்து ,படர் தாமரை ,தேமல் ,கரும்படை ,யானைத்தோல் குட்டம் முதலிய தோல் வியாதிகளுக்கு மேற்பூச விரைவில் குணமாகும்.
எச்சரிக்கை :
முகத்திலும் ,கண்கள் மற்றும் மூக்கு,வாய் முதலிய இடங்களுக்கு அருகில் போடக்கூடாது.இது ஒரு வெப்பம் உண்டுபண்ணும் தைலம்.எரிச்சலை ஏற்படுத்தும்.எனவே கண்டத்திற்கு கீழே வரும் நோய்களுக்கு மட்டும் பயன் படுத்துவது நல்லது.
பூண்டு லேகியம் :
ஒரு தலை பூண்டு 350 கிராம் ,
சுக்கு பொடி 35 கிராம்,
பனைவெல்லம் 350 கிராம்,
பசு வெண்ணை 100 கிராம்,
பசும்பால் 720 ml ,
செய்முறை :
தோலுரித்த பூண்டை கொதிக்கின்ற பாலில் போட்டு நன்கு வெகும்வரை வைத்திருந்து பூண்டுகளை மட்டும் எடுத்து 35 கிராம் சுக்குப்பொடியுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.கருப்பட்டியை சிறிய துண்டுகளாக நுணுக்கி சட்டியில் உள்ள பாலில் போட்டு கரைத்து பாகாக்கவும்,பூண்டும் சுக்கும் அரைத்த விழுதை பாகில் போட்டு கிண்டும் போது 100 கிராம் வெண்ணெய் சேர்த்து கிண்டவும்.வெண்ணெய் உருகி லேகியதில் கலந்தவுடன் சூட்டுடன் எடுத்து மிஸ்ர் ஜாரில் மறுபடியும் அரைத்து எடுத்து சட்டியிலிட்டு கிளற லேகியம் தயாராகிவிடும்.லேகியம் கையில் ஒட்டாமல் இருக்க ஒரு தட்டில் 2 ஸ்பூன் நெய் விட்டு அதில் லேகியத்தை சூட்டுடன் வலித்து போடவும் லேகியம் கையில் ஒட்டாது.
காலை,மாலை உணவிற்கு முன் அல்லது பின் நெல்லிக்காய் அளவு சாப்பிடவும்.
தீரும் நோய்கள் :
வயிற்று உப்பிசம் ,
வாயு தொல்லைகள்,
சயம் ,
இருமல் ,முதலியவை நீங்கும்.
மலக்காற்று (அபான வாயு ) நன்கு பிரியும்.
மூலக்குடோரி லேகியம் :
பிஞ்சு கடுக்காய் பொடி 175 கிராம் ,
(விளக்கெண்ணெய் விட்டு வறுத்து பொடித்து )
பனைவெல்லம் 175 கிராம் ,
பனங்கற்கண்டு 70 கிராம்,
சிற்றாமணக்கு எண்ணெய் 350 ml ,
(விளக்கெண்ணெய் )
தண்ணீரை கொதிக்கவைத்து கருப்பட்டியையும்,
பனங்கற்கண்டு போட்டு கரைத்து வடிகட்டி,பின்னர் பாகுபதம் வரும்படி காய்ச்சி பிஞ்சுகடுக்காய் பொடியை தூவி கிளறவும்,விளக்கெண்ணெய் விட்டு பிசறி பஞ்சாமிர்தம் போல கலந்து வைக்கவும்.
காலை,மாலை ஒரு ஸ்பூன் அளவு வர சுகமாக மலம் போகும்,
மூலக்கடுப்பு நீங்கும்.ரணங்கள் ஆறும் ,மூல முளை கரையும்,
எரிச்சல் நீங்கும்.
கோமூத்திர சிலாசத்து பற்பம் :
விதை நீக்கிய கடுக்காய் தோல், தான்றிக்காய்த் தோல்,நெல்லி முள்ளி வகைக்கு விராகனிடை 10 (35 கிராம்)
இந்த 30 விராகனிடையும்,
4 சேர் (280*4= 1120 ml )சுத்த ஜலத்தில் போட்டு 3ல் ஒரு பங்கு கஷாயமாகக்காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
பிறகு 20 விராகனிடை (70 கிராம்) கோமூத்திர சிலாசத்தை கல்வத்திலிட்டு மேற்படி திரிபலாதி கஷாயத்தை விட்டு
1 சாமம் (3 - மணி நேரம்), அரைத்து வில்லைகள் செய்து காயவைத்து,
50 - முதல் 80 விராட்டியில் புடம் போட பற்பமாகும் .
அளவுகள் : -
1/2 பணவெடை (0.244 மிலி கிராம்), முதல் 1 - பணவெடை (0.488 மில்லி கிராம்) சாப்பிடவும் அனுபானம் ( 1 ) பணவெடை பஸ்பத்துடன் நெருஞ்சில் முள் கஷாயம் சாப்பிட சகல மேகங்களும் நிவர்த்தியாகும் .
1, 1 பணவெடை பஸ்பம் விஷ்ணுக்கிரந்தி கஷாயம் உட்கொள்க ஜீர்ணஜ்வரம் நிவர்த்தியாகும்.
2. 1 பணவெடை பஸ்பம் பசுவின் நெய்யில் கர்பிணிகள் சாப்பிட கர்ப்பம் விருத்தியாகும். கர்பத்திலுள்ள வியாதி நீங்கிச் சுகபிரஸவமாகும்.
3. 1 பணவெடை பஸ்பத்தை அரிசிதிப்பிலி தேவையானதை எடுத்து வறுத்து சூர்ணத்துடன் தேன் சேர்த்து லேகியம் போல் செய்து பாக்களவு லேகியத்தில் பஸ்பத்தை வைத்துச் சாப்பிட க்ஷயம், சுவாஸம், இருமல், நீங்கும்.
4. 1 பணவெடை பஸ்பம் நெய்யில் சாப்பிட இளைத்த திரேகம் புஷ்டியாகும் .
5. இந்த சிலாஜித்பஸ்பம் 2 பங்கு ,லிங்க செந்தூரம் 1 பங்கு, அப்ரக செந்தூரம் 1 பங்கு. இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து வேளை ஒன்றுக்கு 2 குன்றிமணி பஸ்பத்துடன் 5 மிளகு பொடி செய்த சூரணமும் சேர்த்து தேனில் குழைத்து மத்தித்து சாப்பிட மகா க்ஷயரோகங்கள் போகும் .
6. 1 பணவெடை பஸ்பம் தேனில் கொள்ள மேகம், வெட்டை, சூலை, சொறி,சிரங்கு போகும் . இது தவிர மேகம் 21 மூத்தக்கிரிச்சரம், அஸ்மரி ,நீரிழிவு, இவைகள் நீங்கும் .
வீக்கத்திற்கு மெழுகு :
காரீயச் செந்தூரம் 10 to 12 கிராம்,
வேப்பெண்ணெய் 200 ml டு 300 ml ,
ஒரு சட்டியில் காரீயச் செந்தூரம் 10 to 12 கிராம் போட்டு அது சூடாகும் போது வேப்பெண்ணெய் 200 ml அதிலிட்டு கரண்டியால் நுரை வரும் வரை கிளறவும்.கருத்து நுரைவரும்போது அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் ஊற்றி ஆறவிடவும்.சூடு ஆறியபின்பு தேவையான அளவு புட்டியில் அடைக்கவும்.வாசனை தேவைப்பட்டால் ,
வாசனைக்கு மின்சார தைலம் 5 முதல் 10 துளிகள் விடவும்.
(மின்சார தைலம்:
மென்தால் 10 gm ,
தைமால் 10 gm ,
கட்டி கற்பூரம் 10 gm ,
ஒரு பாட்டிலில் ஒன்றாக கலந்து வைக்க 3 நாட்களில் முழுவதும் நீர்மம் ஆகும்.இது மின்சார தைலமாம் .
கண்கள்,மூக்கு துவாரம் முதலியவற்றில் படாமல் உபயோகப்படுத்தவும்.)
தீரும் நோய்கள் :
அடிபட்ட வீக்கம் ,
ரத்தக்கட்டு ,
கால்வீக்கம் ,
முதலிய அனைத்து வகை வீக்கங்களுக்கும் வெளிஉபயோகம் செய்ய குணமாகும்.
நவச்சார கட்டு :
ஆந்திரா வெங்கடேசன் அய்யா முறை :
70 கிராம் எடையுள்ள ஒரே கட்டியாக ஓட்டு நவச்சாரம் எடுத்து 700 to 1 லிட்டர் பிடிக்கும் ஒரு மண் சொம்பு (சிறிய பானை வடிவிலான கலையம் ),வெடியுப்பு ,படிகாரம் ,வெண்காரம் வகைக்கு 100 கிராம் ,தனித்தனியே பொடித்து ,சலித்து மறுபடியும் ஒன்று சேர்த்து அரைத்து, இரண்டு பாகமாக பிரித்து கலையத்தில் ஒருபாக மருந்தை கொட்டி அழுத்தி மேலே சாரக்கட்டி வைத்து மேலும் ஒருபாக மருந்தை வைத்து அழுத்தி மேலகல் மூடி சீலை செய்து உலர்த்தி 200 கிராம் எடை உள்ள 200 எருவாடிகளின் மத்தியில் வைத்து புடமிட நவச்சாரம் உருகி எடைக்குறையாமல் கட்டி இருக்கும்.
இந்த சாரக்கட்டு பாண்டு ,மகோதரம் முதலியவற்றை நீக்கும்.
படிகி தாளக பற்பம் :
சுத்திசெய்யாத படிகாரம் 240 கிராம் ,
சுத்திசெய்த தாளகம் 24 கிராம்,
ஒரு சோம்பு போன்ற மண் குடுவையில் படிகாரத்தை பொடித்து பாதி (140 கிராம் )போட்டு அதன் மேலே 24 கிராம் சுத்தி செய்த தாளகத்தை வைத்து மேலும் படிகாரத்தை போட்டு மேலகல் மூடி சீலை செய்து 20 எருவில் புடமிட தாளகம் உருகி பஷ்ப்பித்திருக்கும்.படிகாரம் பொரிந்து இருக்கும்.
மஞ்சள்,ஆரஞ்சு ,சிவப்பு நிறத்தில் உள்ளவைகளை தனியே எடுத்து 1 மணி நேரம் அரைக்கவும்.இதுவே தாளாக பற்பம்.
பின்னர் படிகாரம் பொரிந்ததை தனியாக அரைத்து வைக்கவும்.
தாளகம் பற்பம் அனுபானம் :
அரிசி எடை முதல் குன்றி அளவு வரை தேனில் காலை மாலை உணவிற்கு பின்பு 7 நாள்கள் சாப்பிட்டு வர சுவாச சம்பந்த பல நோய்கள் தீரும் .தொடர்ந்து சாப்பிட்டுவர நாட்பட்ட நோய்கள் தீரும்.
காசம் ,
இருமல் ,
ஆஸ்துமா ,
கஷ்ட சுவாசம் ,
மூச்சு திணறல் தீரும்,
படிகார பற்பம் அனுபானம் :
இளநீரில் ,or வெண்ணையில் சிட்டிகை கொடுக்க நீரடைப்பு ,வெள்ளை ,வெட்டை ,நீரெரிச்சல் ,நீர்தாரைப்புண்கள் முதலியவை தீரும்.
(தாளக சுத்தி :
சிறு துண்டுகளாக உடைத்து வைத்துள்ள பொன்னரிதாரத்தை (தாளகத்தை )துணியில் முடிந்து ஒரு இரும்பு சட்டியில் 10 மடங்கு கல்சுண்ணாம்பை தாளகத்திற்கு கீழும்,மேலும் போட்டு கொதிக்கின்ற நீரை அதில் வார்க்கவும்.அரைமணி நேரம் சென்றபின்பு நீரில் கழுவ கருப்பு நிறத்தில் தாளகத்தின் களிம்பு போகும்.இது போன்று 7 முறை செய்ய பரிபூரண சுத்தியாகும்.)
கூழ் உண்ணும் பேதி மருந்து:
சுத்தி செய்த நேர்வாளம் 10 கிராம் ,
https://youtu.be/O-vQjTTIOCA
ஓடு நீக்கிய ஆமணக்கு விதை (பருப்பு ) 10 கிராம் ,
கறுக்கிய சிரட்டை கரி 10 கிராம் ,
முதலில் சிரட்டை கரியை கல்வத்தில் நன்கு அரைத்து சலித்து அதனுடன் ஆமணக்கு பருப்பு சேர்த்து 24 நிமிடம் அரைத்து பின்னர் நேர்வாளம் சேர்த்து அரைக்கவும்.அரை மணிநேரம் சென்றபின்பு எண்ணெய் பசை வெளிப்படும்.மருந்தை வழித்து புட்டியில் அடைக்கவும்.
சாப்பிடும் முறை :
வேண்டும்போது கருப்படியுடனோ ,கூழ் உடனோ குண்டுமணி அளவு இம் மருந்தை சேர்த்து விழுங்க ஒரு மணி நேரத்திற்குள் 4 முதல் 5 முறை பேதியாகும். பேதி ஆரம்பித்த பின்பு அடிக்கடி கூழ் குடித்து வரவும்.
பேதியை நிறுத்த திரிகடி அளவு வசம்பு சுட்டகரி தேனுடனோ ,வெந்நீருடனோ கலந்து சாப்பிட பேதி நிற்கும்.
வாத ,பித்த ,கப நோய்கள் சீராக்கும்.
பேதி மாத்திரை :
சுத்திசெய்த நேர்வாளப்பருப்பு 10 கிராம் ,
https://youtu.be/O-vQjTTIOCA
பிஞ்சு கடுக்காய் பொடி 10 கிராம் ,
(நெய்யில் or விளக்கெண்ணெய் விட்டு உப்ப வறுத்து இடித்து சலித்த பொடி )
நேர்வாளத்தை நன்கு மயனம் ஆகும்படி அரைத்த பின்பு பிஞ்சு கடுக்காய் பொடி சேர்த்து மெழுகுபதம் வரும்படி அரைத்து மிளகு அளவு முதல் பச்சை பட்டாணி அளவு மாத்திரைகளாக்கவும்.
சாப்பிடும் முறை :
காலை வெறும் வயிற்றில் ஒரு மாத்திரை வெந்நீரில் விழுங்கவும்.ஒருமணி நேரத்திற்குள் 4 to 5 முறை பேதியாகும்.
பேதியை நிறுத்த
வசம்பை நெருப்பில் கருக்கி பொடித்து திரிகடி அளவு எடுத்து ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட அரை மணி நேரத்திற்குள் பேதி நிற்கும்.உடலில் வாத,பித்த,கபம் சீராகும்.
மோர் சாதம் சாப்பிடவும்.
களங்கு (பிரளயகால ருத்திரன்)
சித்த வைத்திய திரட்டு :பாடல்
(செம்புடனே தாளகமுஞ் சேர்க்குமெடை யொவ் வொன்றாம் வெம்பு மிருபூரம் வெங்காரம் - செம்பெடைக்குக் காலாகக் கொண்டு கருமா னுலையிட்டு மேலாக வூதியெடு மே . செய்த களங்கதனைத் தேனி லிழைத் தூட்ட வெய்த விஷூசி விஷசுரமும் - பய்யவதி சாரச் சுரமுடனே தாவசீர் ணச்சுரமும் பாறுமே பேருரைக்கிற் பார் . )
உரை :
செம்புப் பொடி , தாளகம் வகைக்கு 1 பங்கு ; இரசகற்பூ ரம் , வெங்காரம் வகைக்கு 1 பங்கு ; இவைகளைப் பொடித்து சீமை மூசையிலிட்டு , சில்லிட்டுச் சீலை செய்து , கருமான் உலையிலிட்டு மூசை பழுக்கும்படி ஊதச் செம்பு உருகி இருக்கும் . இதைச் செங்கல்லில் பள்ளம் செய்து அதில் ஊற்றி ஆறவிட் டெடுக்கச் செம்பு களங்காக இருக்கும் . இக் களங்கைத் தேனில் இழைத்துக் கொடுக்க , காலரா , விடசுரம் , அதிசாரம் , அசீரண சுரம் இவைகள் தீரும் .
போகர் 7000 உப்புகட்டு (உப்பு பற்பம் ).
280 கிராம் உப்பை காளான் இடித்த சாற்றால் 10நாள் அரைக்கவும்.ஒரு நாளைக்கு 12 மணிநேரம் கல்வத்தில் அரைக்கவும்.(கிரைண்டரில் 3 மணிநேரம் அரைத்தால் போதும்.) பிறகு சிறிய வில்லைகளாக தட்டி வெயிலில் உலர்த்தி ,அகலில் அடக்கி சீலைமண் செய்து 10 எருவில் புடம் போட,மருந்து கருத்திற்கும்.மீண்டும் அதை காளான் சாற்றால் 12 மணிநேரம் அரைத்து 10 எருவில் புடமிடவும்.மருந்து சற்று வெளுத்து வரும்.இது போலவே மீண்டும் மீண்டும் அரைத்து உலர்த்தி 10 எருவில் மொத்தம் 10 முறை புடமிடவும்.முடிவில் மருந்து சிவந்திருக்கும்.முதல் புடத்தில் அரைகிலோ உப்பில் ஆரமித்தது 10 தாவது புடத்தில் 290 கிராம் மருந்து கிடைத்தது.
காலை மாலை 0.488 mg அளவு தேனுடன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட குன்மம் 8 வகை ,
வாய்வு 80,
பாண்டு 6 வகை ,
சூலை 18 ,
மகோதரம் ,
பீலிகை ,
வயிற்றுவலி ,
விம்மல் ,
குடற் பிறட்டால் வாய்நீரூறல்,
குடல் வாதம் ,
தனுர் வாதம் ,
பட்சவாதம் ,
குமரகண்டவலி ,
முசலகண்டவலி ,
கெவிசை கட்டி ,
வீக்கம் ,
நீராம்பல் ,
விக்கல் ,
பித்தம் 40 ,
மலடு ,
சூதக வலி ,
குடைச்சல் ,முதலிவை நீங்கும்.
கல்பமாக 48 நாட்கள் சாப்பிட உடல் இறுகும்.கல் தூண்போல மாறும்.
207.லிங்க பஸ்பம் :
லிங்க பஸ்பம் லிங்கபஸ்பமாவது 200 gm சேராங் கொட்டைகளைத் துவைத்து ஒரு மொந்தையிற் பாதிப்போட்டு அதின் மத்தியில் போதுமான 100 gm லிங்கத்தை வைத்து மற்ற பாதிகொட் டைத்தூளை இதின்மேற் போட்டு மூடி இரண்டுபலம் பசு நெய் கூடவிட்டுக் கொளுத்திவிடவும் . அது பஸ்பம் ஆகும்.அது எரிகையில் லிங்கத்தில் சிவப்பு நிறம் மாறி வெண்மையாயுள்ள பஸ்ப மாம் . இம்முறை எவர்கட்கும் சிக்குவதரிது இது வெண்மையாவதும் பெரிது.) இதையும் மேற்கூறியபடி அந்த நோய்கட்கு அனுபானங்களிலேற்றி வர வாதம் ,பித்தம் ,கப நோய்கள் யாவும் தீரும் . இச்சாபத்தியம் .
சுவாச குடோரி மாத்திரை :
வெள்ளெருக்கன் பூ 50 கிராம் ,
மிளகு பொடி 50 கிராம் ,
தாளிசபத்திரி இலை பொடி 50 கிராம் ,
வெள்ளெருக்கன் இலை சாறு தேவையான அளவு (சுமார் 300 ml ),
மிக்ஸி ஜாரில் முதலில் பூவையும் ,பின்னர் அதனுடன் மிளகு துளையும் அரைக்கவும்,பின் தாளிசபத்திரி இலைப்பொடியை சேர்த்து அரைத்து 3 சேர்ந்து உறவான கலவையில் வெள்ளெருக்கன் இலை சாறு கொஞ்சம் கொஞ்சமாக விட்டு அரைத்து துவையல் பதத்தில் அதை வழித்து கல்வத்திலிட்டு 1 மணி நேரம் அரைத்து பச்சை பட்டாணி அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தவும்.
காலை மாலை ஒரு மாத்திரை வெந்நீரில் விழுங்க சளி, இருமல் ,மூச்சு திணறல் உடனே குணமாகும்.
- 1.பருத்திக்கொட்டை 1 வீசை (1400 கிராம் ),
- 2. நீர்முள்ளி விதை 1 பலம் (35 கிராம்),
- 3.சபேத் மிசிரி 1 பலம் (35 கிராம்),
- 4.சலாமிசிரி 1 பலம் (35 கிராம்),
- 5.அரிசி திப்பிலி 1 பலம் (35 கிராம்),
- 6.பூமிசர்க்கரை கிழங்கு 1 பலம் (35 கிராம்),
- 7.நெல்லிமுள்ளி 1 பலம் (35 கிராம்),
- 8,அதிவிடயம் 1 பலம் (35 கிராம்),
- 9.கடுக்காய்த்தோல் 1 பலம் (35 கிராம்),
- 10.பூனைகாலிவிதை 1 பலம் (35 கிராம்),
- 11.துத்திவிதை 1 பலம் (35 கிராம்),
- 12.லவங்கப் பட்டை 1 பலம் (35 கிராம்),
- 13.கசகசா 1 பலம் (35 கிராம்),
- 14.சாதிபத்திரி 1 பலம் (35 கிராம்),
- 15.பிஸ்தா பருப்பு 1 பலம் (35 கிராம்),
- 16.சுக்கு 1 பலம் (35 கிராம்),
- 17.சாரைப்பருப்பு 1 பலம் (35 கிராம்),
- 18,வால்மிளகு 1 பலம் (35 கிராம்),
- 19.சிறுநாகப்பூ 1 பலம் (35 கிராம்),
- 20.சீரகம் 1 பலம் (35 கிராம்),
- 21.ஜாதிக்காய் 1 பலம் (35 கிராம்),
- 22.வெண்கோஷ்டம் 1 பலம் (35 கிராம்),
- 23. முருங்கை விதை 1 பலம் (35 கிராம்),
- 24.ஆலம்விதை 1 பலம் (35 கிராம்),
- 25.இலவம் பிசின் 1 பலம் (35 கிராம்),
- 26.கருவேலம்பிசின் 1 பலம் (35 கிராம்),
- 27.முருங்கைப்பிசின் 1 பலம் (35 கிராம்),
- 28.பாதாம் பருப்பு 2.1/2. பலம் (88 கிராம் ),
- 29.பசுவின் பால் 1/2 படி( 720 மிலி).,
- 30.பேரிச்சங்காய் 5 ;பலம்.(175 கிராம் ),
- 31.இளநீர் 2.1/2.படி (3600 மிலி ),
- 32.காரட்டு விதை 10 பலம் (350 கிராம் ),
- 33.உருண்டை வெல்லம் 2 வீசை (2800 கிராம் ),
- 34.நெய் 1/2 வீசை (720 மிலி),
- சாப்பிடும் முறை :
- இந்த லேகியத்தை காலை ,மாலை கழற்சி கொட்டை அளவு சாப்பிட்டுவர தேகபுஷ்டியும் ,விந்து அதிகரித்தலும்,விந்து கட்டும்.
- போகத்தில் இன்பம் காணுதல் உண்டாகும்.
- முடக்குவாத வீர எண்ணெய் ;
- 1.சுத்திசெய்த வீரம் இதை 20 நாட்டுகோழி முட்டையின் வெண்கருவில் சுருக்கு கொடுத்து எடுத்து 20 கிராம் ,
- 2.வெடியுப்பு 20 கிராம் ,
- 3.சுத்திசெய்த நேர்வாளபருப்பு 20 கிராம் ,
- 4.ஏழு தேங்காய் தண்ணீர்விடாமல் ஆட்டி பிழிந்த தேங்காய்ப்பால்.
- சாப்பிடும் முறை :
- 10 முதல் 20 சொட்டு சர்க்கரையில் விட்டு காலை ஒரு வேளை உணவிற்கு முன்பு சாப்பிடவும்.3 to 4 முறை பேதியாகும்.பேதி அதிகமாக போனால் சொட்டுகளின் எண்ணிக்கையை குறைத்து கொள்ளவும்,சுமார் 2 முறையாவது பேதி போனால் நல்லது.காபியிலும் கொடுக்கலாம்.
- தீரும் நோய்கள் :
- முடக்கு வாதம் ,காய் காலிகளில் வீக்கம் ,மூட்டுக்களில் வலியுடன் வீக்கம் ,உட்கார எழ இயலாமை,முக வாதம்,பாண்டு, வீக்கம்,சூலை,வாதநோய்கள்,rheumatism,arthritis முதலியவை குணமாகும்.
- பத்தியம் :
- மாமிசம் ,கடுகு ,நல்லெண்ணெய் ,புளி உணவில் சேர்க்க கூடாது.
- அண்டத்தைலம் :
- 20 நாட்டுக்கோழிமுட்டை மஞ்சள்கரு இரும்பு சட்டியில் விட்டு தீயாக எரித்துக்கொண்டே கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.மஞ்சள்கரு முதலில் வெந்து சிறுசிறு உருண்டைகளாக மாறும் ,தொடர்ந்து கிளற சிறிது எண்ணெய் பசை உருண்டைகளின் மேலே தெரியும்.பின்னர் அது கறுத்து தார் போல உருகி புகை அதிகமாக வரும்.அப்போது சிவந்த நிறத்தில் அண்டத்தைலம் பிரியும்.கற்கத்தை நீக்கி தைலத்தை வடித்து பத்திரப்படுத்தவும்.சூடு ஆறிய பின்னர் புட்டியில் அடைக்கவும்.இதற்கு ஆயுள் ஒரு வருடம்.ஆகும்.
- உபயோகிக்கும் முறை :
- குழந்தைகளுக்கு தாய்ப்பாலிலும்,பெரியவர்களுக்கு சர்க்கரையிலும் சில துளிகள் விட்டு சாப்பிடவும்.இரண்டு வேளைகள் உணவிற்கு பின்பு.சாப்பிடவும்.
- தீரும் நோய்கள் :
- மாந்தம் ,
- சன்னி ,
- பாரிசவாயு ,
- குழந்தைகளின் வலி ,
- நாவுபிடிப்பு ,
- பக்கவாதம் முதலியன தீரும்.
- திரிகடுகு லேகியம் : (அகத்தியர் பரிபூரணம் 400):
- 1.சுக்குப்பொடி 18 கிராம் or 100 கிராம் ,
- 2.மிளகுப்பொடி 18 கிராம் or 100 கிராம் ,
- 3.திப்பிலிப்பொடி 18 கிராம் or 100 கிராம் ,
- 4.சீரகப்பொடி 18 கிராம் or 100 கிராம் ,
- 5.கிராம்பு பொடி 18 கிராம் or 100 கிராம் ,
- 6.ஏல அரிசிப்பொடி 18 கிராம் or 100 கிராம் ,
- 7.பனைவெல்லம் பொடி 175 கிராம் or 1050 கிராம் ,
- 8.மலைத்தேன் 90 மில்லி or 360 மில்லி
- வீடியோ முறைப்படி லேகியம் செய்துகொள்ளவும்.
- சாப்பிடும் முறை :
- லேகியத்தை கொட்டைப்பாக்களவு காலை, மாலை உணவிற்கு பின்பு 20 நாட்கள் சாப்பிடவும்.
- தீரும் நோய்கள் :
- வாயுவுடன் உஷ்ணம் ,
- பித்தவாயு ,
- வயிற்றுவலி ,
- கடுப்பு ,
- உளைவு ,
- எரிச்சல் பேதி ,
- அக்கினி மந்தம்,
- வாந்தி,
- அஷ்திசுரம் ,
- பொருமல் ,
- வாயுக்கிறாணி முதலியவை லேகியம் மட்டும் சாப்பிட்டால் தீரும்.
- இந்த லேகியத்துடன் அயசெந்தூரம் பணவெடை (0.488 மில்லி கிராம்)சேர்த்து சாப்பிட்டால் வாய்வு நோய்கள் அனைத்தும் போகும்.
- தாதுவிர்த்திக்கு தேங்காய் சூரணம் :
- 1.நீர்முள்ளி விதைப்பொடி 140 கிராம் ,
- 2.பொரிகடலை மாவு 70 கிராம் ,
- 3.எள்ளு 70 கிராம் ,
- 4.ஜாதிக்காய் 3.5 கிராம் ,
- 5.ஜாதிபத்திரி 3.5கிராம் ,
- 6.கிராம்பு 3.5கிராம் ,
- 7.புரசம் பிசின் 7கிராம் ,
- 8.நிலக்கடம்பு சமூலம் 18 கிராம்,
- 9.வெல்லம் 175கிராம் ,
- 10.ஐந்து முற்றிய தேங்காய் துருவல் பொடி 140 கிராம்.
- (நன்கு ஈரம் வற்றி என்னை பிரியும் போது எடுக்கவும் ).
- வீடியோ விளக்கத்தில் உள்ளது போல செய்யவும் .
- உபயோகிக்கும் முறை :
- கழற்ச்சிக்கொட்டை பிரமாணம் தினம் இரண்டுவேளை உட்கொள்ளவும் .(1/2 ஸ்பூன் அளவு ).
- தீரும் வியாதிகள் :
- இடுப்புவலி நீங்கும்,விந்து கட்டி போகசக்தி மீறும்.
- பத்தியம் :
- நன்கு சீரணம் ஆகும் உணவுகளை திருப்தியாக சாப்பிடவும்.
- சீன வங்க பற்பம் :
- கடையில் விற்கும் காரீயச்செந்தூரம் 1 பலம் ,(35 கிராம் )
- படிகாரம் 2 பலம், (70 கிராம் )
- இவற்றை கல்வத்தில் போட்டு பசுவின்பால் விட்டு ஒரு மணிநேரம் அரைத்து வில்லை தட்டி உலர்த்தி ஒரு பெரிய அகலில் வைத்து மேலகல் மூடி சீலைசெய்து 20 முதல் 30 எருவில் புடமிடவும்.புடம் ஆறியபின் பார்க்க வில்லை வெளுப்பாக இருக்கும்.அதை அரைத்து சீசாவில் பத்திரப்படுத்துக.
- சாப்பிடும் முறை :
- இந்த பற்பத்தில் வேளைக்கு 2 முதல் 3 குன்றி எடை சலத்தில் போட்டுத் தினம் இருவேளை கொடுக்கவும்.
- தீரும் நோய்கள் :
- கருமேகம் ,
- செம்மேகம் ,
- மேகரணம் ,
- வெள்ளை ,
- வெட்டை ,
- நீர்த்தாரை நோய்கள் ,
- பலவகை தோல் நோய்கள் தீரும்.
- எட்டிக்கொட்டை சுத்திசெய்யும் முறை :
- எட்டிக்கொட்டை தேவையான அளவு எடுத்து நீரில் 24 மணிநேரம் ஊறவைக்கவும்,தண்ணீர் எட்டிகொட்டைக்கு மேலெ நான்கு விரல் அளவு வரை நீர் இருக்கவேண்டும்.மறுநாள் தண்ணீருடன் எட்டிக்கொட்டையை நன்கு பிசைந்து பிசைந்து மேலுள்ள ஆடைபோன்ற கொழகொழப்பான பசைபோன்ற திரவத்தை நீக்கவேண்டும்.இது போல 10 நாட்கள் திரும்ப திரும்ப செய்யவும்,10 நாள் 2 படி பசும்பாலிலோ,பசுமாட்டு கோமியத்திலோ நன்கு வேகவைக்கவும்.பின்னர் மேலே உள்ள வெல்வட் போன்ற மினுமினுப்பான தோலை கத்தியால் சுரண்டி,கத்தியால் இரண்டாக பிளந்து நடுவில் உள்ள முளையை நீக்கவும்.வெயிலில் நன்கு உலர்த்தவும்.எரித்து நன்கு கரியாக்கவும்.இந்த கரியை எட்டிக்கொட்டை வரும் இடங்களில் சேர்க்கவும்.
- காஞ்சுராதி ,எட்டி ,எட்டி கொட்டை ,
- கஞ்சுரம்பழம் ,கஞ்சுரவிதை,எட்டி வட வேர் ,
- கிழவன் குமாரனாக லேகியம் :
- 1.ஓரிதழ்தாமரை ,
- 2.நிலப்பனைக்கிழங்கு ,
- 3.பூமிசர்கரை கிழங்கு,
- 4.பூனைக்காலிவிதை,
- 5.முள்ளிலவம் பிசின் ,
- 6.சீரகம் ,
- 7.ஏலரிசி ,இவைகள் வகைக்கு 100 கிராம் ,
- 8.சர்க்கரை 1 kg
- 9.தேன் 250 gm
- 10.நெய் 500 கிராம்
- முறைப்படி லேகியம் செய்து காலை மாலை கழற்சிக்காய் அளவு சாப்பிட்டு வர சதா இளமையோடிருப்பார்கள் .
- பூர செந்தூரம் :
- சுத்திசெய்த பூரத்தை சிறுசெறுப்படை சாற்றால் 4 சாமம் அரைத்து (12 மணிநேரம் ) வில்லைதட்டி காயவைத்து,அதை கோழிமுட்டை ஓட்டில் அடைத்து சீலை செய்து 4 எருவில் புடமிட்டு ஆறியபின் எடுக்க செந்தூரம்.அதை கல்வத்தில் போட்டு அரைத்து புட்டியில் பத்திரப்படுத்தவும்.
- சாப்பிடும் முறை :
- ஒன்று முதல் இரண்டு அரிசி எடை வெல்லத்தில் வைத்து 3 நாட்கள் இரண்டு வேளை சாப்பிடவும்,கொருக்கு ,வெள்ளை ,வெட்டை ,கைகால் பிடிப்பு குணமாகும்.3 நாளில் குணம் காணாவிடின் மறுபடியும் 5 நாட்கள் கழித்து 3 நாட்கள் கொடுக்கலாம்.
- பத்தியம் :
- பால்சாதம் மட்டும் சாப்பிடவும் .
- ராமதேவர் என்னும் யாகோபு சித்தரின் நாத குருத்தைலம்.
- (வைத்திய கல்லாடம் புத்தகமுறை.)
- 1.சுத்திசெய்த கந்தகம் 175 கிராம் ,
- 2.வெடியுப்பு 70 கிராம் ,
- 3.நவச்சாரம் 9 கிராம் ,
- 4.சுத்தி செய்த அரிதாரம் 13.5 கிராம் ,
- 5.சுத்தி செய்த வீரம் 13.5 கிராம் ,
- 6.சுத்தி செய்த பூரம் 4.5 கிராம் ,
- 7.பசுவெண்ணெய் 280 கிராம் ,
- இவற்றை புதிய காடா துணியில் பூசி புது கலயத்தில் (புது அடிப்பாகம் 20 துளையிட்ட கலயத்தில் ) போட்டு 20 எருவில் புடமிட்டு முறைப்படி குழித்தைலம் வாங்கவும்.இதுவே நாத குருத்தைலம்.முப்புக்கு நிகரானது.வான்மெழுகு செய்முறையில் இந்த தைலத்தால் அரைக்கவேண்டும்.
- பூர பற்பம் :
- சுத்திசெய்த பூரம் 80 கிராம் ,
- ஆப்பசோடா உப்பு 800 கிராம் ,
- ஒரு வஜ்ர மூசையில் ஆப்பசோடா உப்பு பாதி போட்டு நன்கு அழுத்தி அதின் மேல் பள்ளம் செய்து பூரம் வைத்து மீதி ஆப்பசோடாவையும் போட்டு அழுத்தி மேலகல் மூடி கம்பி கட்டி 20 எருவில் புடம் போடவும்.
- மஞ்சள் வர்ணமாக இருப்பது பூர பற்பம் ,
- உளுந்து அளவு தேனுடன் கலந்து 2 வேளைகள் சாப்பிட்டு வர ,புண் ,புரை ,வெள்ளை ,வெட்டை ,சூலை ,இளம்பிள்ளை வாதம் தீரும்.
- வெள்ளையாக இருப்பது ஆப்ப சோடா பற்பம் ,
- தம்படி எடை வாயில் போட்டு வெந்நீர் அருந்த குன்மம் ,வயிற்று நோய்கள் அனைத்தும் தீரும் .
- அஞ்செண்ணைத் தைலம் :
- உடம்பில் எந்த பகுதில் வலி இருப்பினும்,இந்த தைலத்தை சிறிது எடுத்து தேய்க்க வலி உடனே தீரும்.
- செய்முறை :
- 1.புங்கெண்ணெ ,720 மிலி to 1 லிட்டர்
- 2.வேப்பெண்ணை,720 மிலி to 1 லிட்டர்
- 3.விளக்கெண்ணெய் ,720 மிலி to 1 லிட்டர்
- 4.இலுப்பைஎண்ணெய் ,720 மிலி to 1 லிட்டர்
- 5.நல்லெண்ணெய் . 720 மிலி to 1 லிட்டர்
- 6.புளித்த காடி 2 படி (2880.மில்லி லிட்டர் )
- 7.வசம்பு பொடி, 18 gm to 25 gm ,
- 8.பெருங்காயம் பொடி, 18 gm to 25 gm ,
- 9.சுக்குப்பொடி, 18 gm to 25 gm ,
- 10.மிளகுப் பொடி, 18 gm to 25 gm ,
- 11.திப்பிலிப்பொடி, 18 gm to 25 gm ,
- 12.ஓமம் பொடி, 18 gm to 25 gm ,
- 13.சதகுப்பை பொடி, 18 gm to 25 gm ,
- 14.கிராம்பு பொடி, 18 gm to 25 gm ,
- 15.கடுகு ரோகிணி பொடி, 18 gm to 25 gm ,
- 16.கொடிவேலி பொடி, (சித்திரமூலம் )18 gm to 25 gm ,
- 17.தோலுரித்த வெள்ளைப் பூண்டு விழுது 18 to 25gm,
- 7 ம் எண்ணிலிருந்து 17 ம் வரை அனைத்தையும் காடியால் அரைத்து சட்டியிலிட்டு கொதிப்பித்து அத்துடன் 5 வகை எண்ணெய்களை கலந்து சிறுதீயாக நீர் சுண்ட எரித்து கற்கம் நீக்கி வடித்து பத்திரப் படுத்தவும்
- சித்தரச சூரணம் :
- தில்லை மரப்பட்டை சூரணம் 175 கிராம் ,
- வாலை ரசம் or சுத்திசெய்த ரசம் 35 கிராம் ,
- கல்வத்திலிட்டு 7 மணிநேரம் குறைந்தது அரைக்கவேண்டும்.
- அப்படி அரைக்கையில் ரசம் மடிந்து பொடியுடன் ஐக்கியமாகிவிடும்.இந்த மருந்தை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சாப்பிடலாம் ,வாய் பிடிக்காது.யாதொரு பயமுமின்றி சாப்பிடலாம்.தேகம் வலிமை பெறும்.
- சாப்பிடும் அளவு :
- தினமும் காலை 2 குன்றி முதல் 5 குன்றி நிறை வரை பால்,மோர், நெய் முதலியன அனுபானங்களில் சாப்பிட்டு வரலாம்.
- தீரும் நோய்கள் :
- கண் சம்பந்தப்பட்ட நோய்கள் ,கிரந்தி,அட்டகுன்மம் ,18 வகை குஷ்டம் ,புற்றுநோய்கள் ,மேகநோய்கள் தீரும்.
- உப்புகட்டு :
- 100 கிராம் கல்லுப்பு (சோற்றுப்பு )
- ஒருமணி நேரம் கைவிடாமல் அழுத்தி அரைக்க மெழுகு போல் ஆகும்.அதை துணியில் வைத்து பந்துபோல் இறுக்கி ஒருமணி நேரம் வைத்திருக்கவும்.பின்னர் பச்சை இலந்தை இலை ஒரு மஞ்சள் பை அளவு சேகரித்து அதை சன்னமாக அரைத்து அதை ஒரு வஜ்ர மூசையில் பாதி வைத்து அதன்மேல்உப்பு பந்தை துணி நீக்கி நடுவில் வைத்து மேலும் இலந்தை இலை அரைத்த தூளை போட்டு அழுத்தி மேலகல் மூடி கம்பி கொண்டு இறுக கட்டி 30 to 50 எருவில் புடமிட்டு ஆறி எடுக்க உப்பு எடை குறையாமல் கட்டி இருக்கும்.சாம்பல் நிறமாக மேலே இருக்கும்.
- தீரும் நோய்கள் :
- இதை பொடித்து அரைத்து குன்றி எடை தேன் நெய் முதலிய அனுபானங்களில் கொடுக்க புளித்த ஏப்பம்,நடுமார்பு நோய்,குன்மம்,வயிற்று கட்டிகள் ,சிறுநீரக நோய்கள்,முதலிய பெரிய நோய்கள் தீரும்.
- இருமலுக்கு லேகியம் :
- மிளகு பொடி 100 gm ,
- திப்பிலி பொடி 100 gm,
- பசுவெண்ணெய் 200 gm ,
- சீனா கற்கண்டு பொடி 200 gm
- வீடியோ முறைப்படி மருந்தாக செய்து முடிக்கவும்.
- சாப்பிடும் முறை :
- காலை ,மாலை கழற்சிக்காய் அளவு சாப்பிட்டு 10 நிமிடம் கழித்து வெந்நீர் குடிக்கவும்.
- தீரும் நோய்கள் :
- வறட்டு இருமல் ,சளிக்கட்டுடன் கூடிய இருமல் தீரும்.
- குரல் நன்றாகும்.
- சங்குபாஷாணம் சுத்தி செய்யும்முறை :
- வெள்ளை பாஷாணம் அல்லது சங்குபாஷாணம் 20 gm to 25 கிராம் ஒரே கட்டியாக இருக்கவேண்டும்.பெரிய பாவக்காய் (கொம்பு பாகல் ) 200 gm to 300 gm கொண்டுவந்து விதை நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கி நன்கு துவையல் போல நீர்விடாமல் அரைத்து ஒரு மண் அகலில் பாதி போட்டு அதன் மேலே 25 gm சங்குபாஷாண கட்டியை வைத்து மேலும் பாகற்காய் அரைத்த மீதமுள்ள விழுதை போட்டு மூடி மேலகல் மூடி சீலைமண்செய்து 10 to 20 எருவில் புடமிடவும்.புடம் ஆறியபின்பு எடுத்து பார்க்க சங்குபாஷாணம் சுத்தியாகியிருக்கும்.அதை ஒரு துணியால் துடைத்து பத்திரப்படுத்தவும்.
- எலிப்பாஷாணம்
- ஆண்மை இழந்தவர்களுக்கு மாத்திரை :
- சுத்தி செய்த சங்கு பாஷாணம் 20 gm ,
- கூகைமாவு 10 gm ,
- திரிகடுகு 10 gm ,
- தோலுரித்த இஞ்சியின் சாற்றால் 1 மணிநேரம் முதல் 3 மணி நேரம் அரைக்கவும் ,சற்று ஈரம் காய்ந்து வரும்போது குன்றி அளவாக மாத்திரை உருட்டி நிழலில் உலர்த்தவும்.
- சாப்பிடும் முறை :
- காலை, மாலை , ஒரு மாத்திரை சாப்பிடவும்,
- காலைமட்டும் ஒரு மாத்திரை சாப்பிடவும்,
- தீரும் நோய்கள் :
- முழுவதும் எழுச்சி இல்லாத ஆண்குறியும் எழுச்சி உண்டாகி விரைப்புத்தன்மை ஏற்படும்.
- விரைப்பு தன்மை குறைந்தவர்களுக்கு அதிகரிக்க செய்யும்.
- விந்தை ஊறவைக்கும்.
- உயிர் அணுக்கள் அதிகரிக
- சங்கு பாஷாண பற்பம் :
- சுத்திசெய்த சங்கு பாஷாணம் 12 கிராம் கட்டியாக இருக்கவேண்டும்.
- அப்பளாக்காரம் 72 கிராம் ,
- 100 gm to 200 கிராம் கொள்ளும்படியான ஒரு மூசை எடுத்து அதில் அப்பளக்காரம் 36 கிராம் போட்டு விரலால் அழுத்தி அமுக்கி அதன்மேலே சங்கு பாஷாணம் வைத்து மேலே மீதமுள்ள அப்பளக்காரம் 36 கிராம் போட்டு விரலால் அழுத்தி அமுக்கி மேலகல் மூடி சீலைமண் 7 செய்து சேவல் உயர புடம் போடவும்.
- புடம் ஆற்றி எடுத்து சங்கு பாஷாணம் மட்டும் பிரித்து கல்வத்திலிட்டு அரைக்க பழுப்பு வர்ணமான பற்பம் அல்லது சுண்ணம் கிடைக்கும்.
- சாப்பிடும் முறை :
- பற்பத்தை அரிசி எடை தேனுடன் சாப்பிட சுரங்கள் அனைத்தும் போகும்.
- பற்பத்தை அரிசி எடை வெண்ணெயுடன் 10 நாட்கள் காலை,மாலை சாப்பிட சுவாசகாசம் ,வாதநோய்கள் தீரும்,
- பத்தியம் :
- இச்சாபத்தியம்.(உப்பு;பு ளி ,பெண்போகம் நோய் முழுவதும் தீரும் வரை கூடாது )
- கெந்தக சுத்தி :(கந்தகம் சுத்திசெய்யும் முறை );
- ஒரு அடி சதுர அங்குலம் உள்ள காடாத்துணியில் தேவையான அளவு கந்தகத்தை வைத்து முடிந்து அது மூழ்க பசும்பால் விட்டு 24 மணி நேரம் வைத்திருக்கவும். மறுநாள் தயிர் போல் உள்ள பாலிலிருந்து அதை எடுத்து கந்தகத்தை பாலில்லாமல் சுத்தமாக நீரில் கழுவவும்.பிறகு துணியில் அல்லது பேப்பரில் பரப்பி ஈரம் உலர காயவைத்து எடுக்கவும்.
- கந்தகம் ,கெந்தி ,பரைநாதம் ,நாறும்பூ,கெந்தகம்
- தாளகம் சுத்தி செய்முறை :
- பொன்னரிதாரம் or ,தகட்டாரிதாரம் ,100 கிராம் எடுத்து துணியில் முடிந்து 1 கிலோ தாளிக்காத கற்சுண்ணாம்புக்கு இடையில் வைத்து கொதிக்கின்ற நீரை ஊற்றவும் ,சுண்ணாம்பு நன்கு கொதித்து அடங்கும்.பின்னர் அதை மறுபடியும் இம்முறைபோல 7 தடவை செய்யவும்.பிறகு தண்ணீரில் 10 முறை கழுவி எடுத்து ஈரம் போக காயவைக்கவும்.
- தாளகம் ,மால்தேவி ,தாரம் ,மஞ்சள் தாளகம்
- திருமூர்த்தி செந்தூரம்.செய்முறை
- சுத்தி செய்த லிங்கம் பலம் 1(36 கிராம் )
- சுத்தி செய்த தாளகம் பலம் 3/4(27 கிராம் )
- சுத்தி செய்த வீரம் பலம் 1/2 (18 கிராம் )
- தனி தனியே கல்வத்தில் அரைத்து ,பின்னர் மூன்றையும் ஒன்று சேர்த்து அரைக்க புகையும்,புகையை நுகராமல் 3மணி நேரம் கல்வத்திலேயே மருந்தை பரவலாக வைத்து புகை அடங்கியபின்பு ஒரு அரை செங்களில் விரல் போகும் அளவு பள்ளம் செய்து அதில் மருந்தை நிரப்பி மறு செங்கலால் மூடி சீலைமண் செய்து 23 எருவில் புடமிடவும்.புடம் ஆறும் முன்பு செங்கலை பசுவின் சாணத்தில் வைத்து சூடு ஆற்றவும்.பின்னர் மருந்தை கல்வத்திலிட்டு அரைக்கவும்.
- மூக்கு பொடி நிறத்தில் மருந்து முடிந்து இருக்கும்.வெளி காற்று போகாதபடி புட்டியில் அடைத்து பத்திர படுத்தவும்.
- சாப்பிடும் முறை :
- 1/4 குன்றிமணி அளவு முதல் 1/2 குன்றிமணி அளவு வரை தேனில் கலந்து இரண்டு வேளைகள் சாப்பிட சுரம் ,ஜன்னி ,பாரிச வாயு ,ஜிக்குவா ரோகம்,ஈளை ,சுவாச காசம் முதலியவை தீரும்.
- பத்தியம் :
- புளி சேர்த்தும் ,சேர்க்காமலும் நோயின் தன்மை ஏற்ப பத்தியம் வைக்கலாம்.இச்சா பத்தியம் இருத்தல் நலம்.சுரத்திற்கு மட்டும் கஞ்சி மட்டும் குடிக்கவும்.
- மெழுகுத் தைலம் செய்முறை :
- தேன் மெழுகு 350 கிராம் ,
- சிக்கிமுக்கி கல் 350 கிராம்,
- வெள்ளை குங்கிலியம் 175 கிராம் ,
- சோற்றுப்பு 350 கிராம் ,
- ஓமம் 88 கிராம் ,
- கப்பு மஞ்சள் (பூச்சு மஞ்சள் கிழங்கு ) 88 கிராம் ,
- ஆற்று மணல் 175 கிராம் ,
- வீடியோவில் காட்டி இருக்கும் முறைப்படி செய்துகொள்ளவும்,
- வாலை பானையிலும் இதுபோல எடுக்கலாம்.
- தைலத்திற்கு 3ல் ஒரு பங்கு வேப்பெண்ணெய் கலந்தும் உபயோகப்படுத்தலாம் .
- தீரும் நோய்கள் :
- சர்வாங்க வலி ,
- கணுச்சூலை ,
- கீல்களில் காணும் வீக்கம் ,
- குழந்தைகளுக்கு காணுகின்ற இசிவு ,
- வெட்டுக்காயம் ,
- பீஜ வீக்கம் ,
- நரித்தலை வாதம்(கால்களில் மூட்டு வீக்கம் )
- ஆண்குறி தளர்ச்சி ,
- ஸ்தன தளர்ச்சி ,
- கீல் லும்பு ,சதை ,நரம்பு முதலியவற்றைப் பற்றிய வாயு முதலியவை தீரும் .
- காது செவிட்டிற்கு தைலம் செய்முறை :
- திருநீற்று பச்சிலை சாறு 50 ml or (கற்கம் 50 கிராம் ),
- தோலுரித்தவெள்ளைப்பூண்டு 15 no's or (50 கிராம் ),
- பெருங்காய தூள் 1/2 ஸ்பூன் அளவு ,
- தேங்காய் எண்ணெய் 50 ml ,
- 4 ம் கலந்து மெழுகு பதத்தில் இறக்கி துணியில் வடிகட்டவும்.
- எண்ணெய் பச்சை நிறமாக இருக்கும்.
- இதை இரவு 3 துளிகள் வீதம் 2 காதுகளிலும் விட்டு பஞ்சு கொண்டு அடைத்து கொண்டு தூங்கவும்,இப்படி 3 நாட்கள் செய்யவும்,பிறகு இடைவெளி விட்டு 3 நாட்கள் மறுபடியும் செய்யவும்.
- காது மந்தம் ,
- காதில் நீர் வடிதல் ,
- சீழ் வடிதல் ,
- காது இரைச்சல் ,
- செவிட்டுத்தன்மை ,
- காதுவலி முதலியவை தீரும் ,
- மனோசிலை பாஷாண சுத்திமுறை :
- மனோசிலையை நன்றாக பொடித்து தோலுரித்த இஞ்சி சாற்றில் 3 மணி நேரம் அரைக்கவும் .பின்னர் அகலமான தட்டுகளில் விட்டு வெயிலில் உலர்த்தி பொடித்து புட்டியில் பத்திரப்படுத்தவும்.இதை மருந்துகளுக்கு சேர்த்துக்கொள்ள எந்த குற்றமும் நேராது.இதேபோல எலுமிச்சம் பழச்சாறு ,பசுவின் மோர் இவைகளாலும் 3 மணி நேரம் அரைத்து உலர்தலாம்.சுத்தியாகும்.
- நவச்சாரக்கட்டு செய்முறை :
- விளாங்காய் பருமனுள்ள ஒரு குடுவையில் 88 கிராம் வெடியுப்பை நுணுக்கிப்போட்டு அதில் 12 கிராம் எடை உள்ள நவச்சாரக்கட்டியை கரிநெருப்பனலில் வைத்துவிட்டு விலகி நிற்கவும்.வெடியுப்பெல்லாம் புகைந்து புகைந்து போய் சாரம் மாத்திரம் உருகி கட்டி இருக்கும்.இதை எடுத்து தொழில்களுக்கு வைத்துக்கொள்ளவும்.பாஷாணத்தையும் ,வீரத்தையும் இதுபோல கட்டிக்கொள்ளலாம்.
- நவச்சாரம் ,சாரம் ,ஜெயநீர்க்காதி,9 உப்பு ,கிரகசாரம் ,
- சதுர்முக உப்புக்கட்டு :
- 1,நவச்சாரம் 35 கிராம் ,
- 2.கரியுப்பு (சோற்றுப்பு )35 கிராம் ,
- 3.பூநீறு (ஆப்ப சோடா ) 35 கிராம் ,
- 4.கற்பூரம் ,35 கிராம் ,இந்த நான்கையும், தனித் தனியே பொடித்து ,பிறகு ஒன்றாக சேர்த்து அரைத்து ஒரு விளாங்காய் பருமனுள்ள ஒரு குடுவையில் போட்டு கரிநெருப்பனலில் வைத்துவிட்டு விலகி நிற்கவும்,புகை வரும் .புகை அடங்கியதும் எடுத்து ஆறவைக்கவும், பின் இளநீர் ஒன்றின் சலம் எடுத்து அதில் இந்த பற்பத்தில் (சுண்ணத்தில் )ஒரு விராகன் எடை (3.5 கிராம் ) காலை, மாலை சாப்பிட வயிற்றுவலி ,சூதகவாயு ,குன்மம் முதலியவைகள் யாவும் சொஸ்தமாகும்.
- பத்தியம் :
- இச்சாபத்தியம் . (உப்பு ,புளி ,பெண்போகம் நீக்கவும் )
- 1.சுத்தி செய்த தாளகம் 5 வராகனெடை (17.5gm to 18gm ),
- 2.சுத்தி செய்த கெந்தகம் 5 வராகனெடை (17.5gm to 18gm ),
- 3.சுத்தி செய்த மனோசிலை 5 வராகனெடை (17.5gm to 18gm ),
- இம்மூன்றும் கல்வத்திலிட்டு காடிவாரத்தரைத்து மெல்லிய சீலையில் பூசிக் காயவைத்து பிறகு மறுபடியும் எடுத்து திரும்பவும் பூசி வத்திபோல் திரித்துக் காயவைத்தெடுத்து ஒரு முனையை விளக்கில் கொளுத்தி எரியும் போது தலைகீழாய் பிடிக்க சுடர்த்தைலம் இறங்கும்.அந்த தைலத்தை சீசாவில் பிடித்து வைத்துக்கொண்டு வெற்றிலையில் 1-2-3 துளி வரையில் விட்டு மடித்துத் தின்னத் தலைநடுக்கல்,தேகம் நடுக்கல் ,கைகால் நடுக்கல் இவைகள் தீரும்.நரைதிரை மாறும் இச்சாபத்தியம்.
- நீர் அடிக்கடி பிரிதல் குணமாக மருந்து:
- தனி அமுக்கரா சூரணம் 1 பங்கு ,
- குரோசாணி ஓமம் சூரணம் 1 பங்கு ,கலந்து சிட்டிகை பிரமாணம் (இரண்டு விரல்களால் எடுக்கும் அளவு ) வாயிலிட்டு தண்ணீர் குடிக்க குணமாகும்.பசிதீபனம் உண்டாகும்.
- குரோசாணி ஓமம் சுத்தி :
- சுண்ணாம்பு தெளிநீரில் கழுவி வெயிலில் உலர்த்தவும்.
- அமுக்கரா கிழங்கு சுத்தி :
- நாட்டு பசும்பாலில் வேகவைத்து மேல்தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்தவும்.
- தாளக பற்பம் செய்முறை :
- சுத்தி செய்த பொன்னரிதாரம் 35 கிராம் ,
- சீனி (சுகர் ) 35 கிராம் ,
- ஒரு புது மண் அகலில் 17 1/2 கிராம் சீனி பரப்பி ,அதின் மேலே தாளகம் வைத்து மீதமுள்ள சீனியால் தாளகத்தை முடி மேல் அகல் முடி சீலைமண் 3 செய்து உலர்த்தி 25 எருவிற்கு மத்தியில் வைத்து புடமிடவும்.புடம் ஆறியபின் எடுக்க தாளகம் உருகி பஷ்பித்திருக்கும்.அதை மட்டும் சுரண்டி கல்வத்திலிட்டு 3 மணி நேரம் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- உளுந்து முதல் குன்றி அளவு தேன் or நெய்யில் காலை மாலை உணவிற்கு பின்பு 7 நாள்கள் சாப்பிட்டு வர பல நோய்கள் தீரும் .
- 1.சயம்,
- 2.தோல் நோய்கள் ,
- 3.விஷக்கடி ,(பூரான் கடி )
- 4.குளிர்காய்ச்சல் ,
- 5.சிலேத்தும வாதம் ,
- 6.கரப்பான் ,
- 7.சரீர குத்தல் ,
- 8.குஷ்டரோகம் ,நடுக்கற்சுரம் ,
- 9.துஷ்ட விரணம் ,
- 10,தலைநோய்கள் ,
- 11.மூக்கில் சதைவளர்ச்சி ,
- 12.மார்சளி
- 13.ஆண்குறிநோய்கள் முதலியவை நீங்கும்.
- பசும்பாலை நன்கு காய்ச்சிய பின்பு,பொன்னாங்கண்ணி சாறு சேர்த்து இரண்டில் ஒன்றாக வற்ற காய்ச்சவும்,பாத்திரத்தை அசையாமல் ஓரிடத்தில் வைத்து சூடு ஆறவிடவும்,நன்கு சூடு ஆறியபின்பு உறைமோர் கொஞ்சம் ஊற்றவும்,மறுநாள் மத்தால் கடைந்து வெண்ணெய் எடுத்து நீர்வற்ற உருக்க பொன்னாங்கண்ணி நெய்யாகும்.சூடு ஆறியபின்பு வாயகன்ற புட்டியில் வைக்கவும்.
- உபயோகிக்கும் முறை :
- காலை ,மாலை கண்களுக்கு மைபோல தீட்டிவர கண்நோய்கள் அனைத்தும் தீரும்.
- வாரம் 2 நாட்கள் இந்த நெய்யை உச்சியில் பூசி சூடுண்டாக தேய்த்து 1 மணி நேரம் ஊறவிட்டு பின்னர் வெந்நீரில் சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.இப்படி ஒரு மண்டலம் தேய்த்து குளிக்க பகலில் நட்சத்திரம் கண்களுக்கு தோணும்.
- பாரிச வாதம்,முழங்கால் வாதம் உள்ள பகுதிகளில் சிறிது எடுத்து தேய்த்து பிடிக்க வலி உடனே தீரும்.தேய்க்கும் போது எரிச்சல் மிகுந்தால் தேய்ப்பதை நிறுத்திவிடவும்.
- பிண்டத்தைலம் செய்முறை :
- மஞ்சிஷ்டி வேர் 250 gm,
நன்னாரி வேர் 250 gm,
நல்லெண்ணெய் 2 லிட்டர் ,
தேன்மெழுகு 75 கிராம் ,
வெள்ளை குங்கிலியம் 50 கிராம் ,
மஞ்சிஷ்டி வேரையும் , நன்னாரி வேரையும் ,ஒன்றிரண்டாக இடித்து 10 லிட்டர் நீரில் போட்டு 8ல் ஒன்றாக வற்றக்காய்ச்சி வடிகட்டி கஷாயத்தை நல்லெண்ணெயுடன் சேர்த்து வண்டல் மெழுகுபதமாக காய்ச்சி தேன்மெழுகும் குங்கிலியமும் போட்டுள்ள வடிகலசத்தில் தைலத்தை வடிகட்டவும்.குங்கிலியம் சரியாக உருகி தைலத்தில் சேராமல் இருந்தால் சிறிது தைலத்துடன் அடுப்பில் வைத்து சூடு காட்டவும்.அனைத்தும் ஒன்றாக சேர்ந்துவிடும்.சூடு ஆறிய பின்பு நன்கு கீழும் மேலும் கலந்து எண்ணையை புட்டியில் பத்திரப்படுத்தவும்.
தீரும் நோய்கள் :
இரவிலோ ,பகற்பொழுதிலோ சிலதுளிகள் தேவையான இடங்களில் தேய்க்க , சர்வாங்க வலி ,வெட்டுக்காயங்கள் ,சரும நோய்கள் ,குதிங்காலில் வெடிப்பு ,ஆறாத ரணங்கள்,தீப்புண்கள்,குதிங்கால் வலி ,எரிச்சல் ,நரம்புகளின் சீர்கேட்டால் ஏற்படும் வலி ,வீக்கம் ,அடிபட்டவலிகள் முதலியவை தீரும். - அலுப்பு மருந்து :
- 1.தோல்நீக்கி இடித்து சலித்த சுக்கு பொடி 100 கிராம்,
- 2.அரிசி திப்பிலி பொடி 100 கிராம் ,
- 3.கடுக்காய் தோல் பொடி 100 கிராம்,
- 4.சிவதைவேர் பொடி 100 கிராம் ,
- 5.வெடியுப்பு பொடி 100 கிராம் ,
- அனைத்தையும் ஒன்றாக கலந்து 3 முறை நன்கு சல்லடையில் சலித்து பத்திரப்படுத்தவும்.அலுப்பு மருந்து சூரணம் என்று பெயர் எழுதி பாட்டில் மேலே ஒட்டவும்.
- சாப்பிடும் முறை :
- காலை, மாலை திரிகடி அளவு அல்லது 1/2 ஸ்பூன் வாயிலிட்டு சுவைத்து சாப்பிட்டு வெந்நீர் அருந்தவும்.கொஞ்சம் உப்பு சுவையுடன்,துவர்ப்பு ,காரமாக இருப்பதுடன் நன்கு உமிழ்நீர் சுரக்கும்,உமிழ்நீர் சுரப்பு தானாக நிற்கும் வரை சூடு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
- தீரும் நோய்கள் :
- இடுப்பு வலி ,
- தலைவலி ,
- அலுப்பினால் ஏற்படும் கடுப்புவலி ,
- தேகம் பூராவும் ஏற்படும் வலி ,
- இருமல் ,
- கபம் ,
- பசியின்மை ,
- அருசி ,
- புளித்தஏப்பம் ,
- சிறுநீரக கோளாறுகள்,முதலியவை சாப்பிட தீரும்.
- தலைவலிக்கும் ,சுரத்திற்கும் இந்த சூரணத்தை சிறிது எடுத்து பாலில் குழைத்து பற்றுப்போட குணமாகும்.
- நாகம் சுத்திசெய்யும் முறை :
- சிறுகண் நாகம் வாங்கி (முத்திரை கட்டிநாகம் ,விசைப்படகின் ஒடிந்த ரெக்கை (விசிறி) 7 முறை முதல் 21 முறை நாகத்தை உருக்கி இலுப்பை எண்ணையில் சாய்க்கவும்,சூடுஆறியபின்பு மறுபடியும் உருக்கவும்.இப்படி உருக்கும் போது கடைசியாக நவச்சாரத்தை தூள் செய்து உருகி இருக்கும் நாகம் மேலே தூவ தீப்பற்றி நீல நிற புகையுடன் நாகத்தின் கசடுகளை நீக்கும்.இந்த நாகத்தை மருந்து செய்வதற்க்கு பயன்படுத்தவும்.
- நாக பற்ப குரு மருந்து செய்முறை :
- வெடியுப்பு 100 கிராம் ,
- படிகாரம் 100 கிராம் ,
- எலுமிச்சம்பழத்தோல் 100 கிராம்,
- இவைகளை தனித்தனியே பொடித்து பிறகு ஒன்று சேர்த்து மெழுகு பதம் வரும்வரை அரைத்து வில்லைத்தட்டி காயவைத்து ஓட்டிலிட்டு நெருப்பனலில் ஈரம் வற்ற புரட்டி எடுக்கவும்.or வில்லையை நன்கு நிழலில் உலர்த்தவும்.
- நாகபற்பம் :
- சுத்தி செய்த நாகத்தை இரும்பு சட்டியிலிட்டு உலையில் வைத்து அதிகமான நெருப்பில் உருக்கி,உருக்கு முகத்தில் நாக குருவை திரிகடியளவாக பொடித்து தூவவும்,குருமருந்து பற்றிஎரிந்து நாகத்தையும் சேர்த்து எரிக்கும் ,இரும்பு கரண்டியால் துலாவிக்கொண்டே இருக்கவேண்டும்.நாகம் முழுவதும் பூத்து மஞ்சள் நிற பற்பம் ஆகும்.சூடு ஆறியபின்பு சல்லடையில் சலித்து எடுத்து சிற்றாமணக்கு இலை சாற்றால் 4 ஜாமம் அரைத்து வில்லை தட்டி காயவைத்து 30 to 50 எருவில் புடமிடவும்.இப்படி மறுபடியும் அதே இலைசாற்றால் அரைத்து முன்போல 3 புடமிடவும்.நாகபற்பம் உயர்தரமான பற்பமாக முடியும்.
- சாப்பிடும் முறை :
- குன்றிமணி அளவு நெய் ,வெண்ணெயுடன் ,இருவேளை உணவிற்கு முன்பு சாப்பிடவும்.
- தீரும் நோய்கள் :
- இரத்தமூலம் ,சீழ்மூலம் ,புரையோடும் பௌத்திரம்,மேகரணம்,வெள்ளை ,நீரெரிச்சல் முதலியவை தீரும் .தாது வலுக்கும்.
- பாஷாண கட்டு செய்முறை :
- விளாங்காய் பருமனுள்ள ஒரு குடுவையில் 88 கிராம் வெடியுப்பை நுணுக்கிப்போட்டு கரிநெருப்பனலில் வைத்துவிட்டு வெடியுப்பு உருகிய பின்னர் அதில் 9 to 12 கிராம் எடை உள்ள பாஷாணகட்டியை போட்டு விலகி நிற்கவும். வெடியுப்பெல்லாம் புகைந்து புகைந்து போய் முடிவில் பாஷாணம் மாத்திரம் உருகி கட்டி வில்லைபோல அடியில் ஒட்டியிருக்கும். இருக்கும்.இதை எடுத்து தொழில்களுக்கு வைத்துக்கொள்ளவும். நவசாரத்தையும்,வீரத்தையும் இதுபோல கட்டிக்கொள்ளலாம்.
- சித்திரமூல நெய் :
- சித்திரமூலவேர்பட்டை 70 கிராம் ,
- ஆவின் நெய் 1440 மி.லி.
- நல்லெண்ணெய் 1440 மி.லி .
- பசும்பால் 360 மி.லி.
- சித்திரமூலவேர்பட்டையை பசும்பால் விட்டரைத்து எண்ணெய் ,நெய் முதலியவற்றுடன் கலந்து பதமுறக் காய்ச்சி வடித்து வைத்துக்கொள்க.இதில் வேளைக்கு 1,முதல் 2 தேக்கரண்டி வீதம் தினம் 1 வேளை காலையில் அருந்தவும், இப்படி அரை முதல் ஒரு மண்டலம் அருந்த கிரந்தி ,மேகரணம்,வெடிப்புள்ள ரணங்கள்,மேகசூலை ,கொருக்கு ,உள்ளழலை முதலியன குணமாகும்.
- கார லவண பற்பம் :
- படிகாரம் 100 கிராம்,
- வெடியுப்பு 100 கிராம்,
- வெங்காரம் 100 கிராம் ,
- படிகாரத்தை பொடி செய்து ஒரு அகன்ற மண்சட்டியில் பரப்பி அதன் மீது 100 gm வெடியுப்பை பொடித்துப் போட்டு அதன் மீது 100 gm வெண்காரத்தை பொடித்துப் போட்டு அடுப்பிலேற்றி சிறுதீயிலெரித்து எல்லாம் உருகி நீர்ச்சுண்டிப் பூத்தவுடன் கீழிறக்கி ஆறவிட்டுக் கல்வத்திலிட்டு நன்றாய் அரைத்து சீசாவில் பத்திரப்படுத்துக.
- சாப்பிடும் முறை :
- ஒரு வேளைக்கு 1/2, 3/4, விராகனெடை இளநீரில் கொடுக்க தேகத்திலுள்ள நீர்கோவையை சிறுநீர்மூலமாக வெளிப்படுத்தும்.
- இப்படி 2,3 நாள் கொடுக்க தேகம் சுபாவ அளவுக்கு வந்தவுடன் ரத்தத்தை உண்டாக்கக்கூடிய அய செந்தூரம்,காந்த செந்தூரம் ,மண்டூரச் செந்தூரம் முதலியவற்றை கொடுக்க வேண்டியது.
- மேகனாதி எண்ணெய் :
- 1.கோவைச்சாறு அரை படி 720 ml ,
- 2.வல்லாரைச்சாறு அரை படி 720 ml ,
- 3.சிறுசெறுப்படை சாறு அரை படி 720 ml ,
- அல்லது பொடி 100 கிராம் ,
- 4.பொன்னாங்காணிசாறு அரை படி 720 ml ,
- 5.ஆணை நெருஞ்சில் சாறு அரை படி 720 ml ,
- 6.சீந்தில் தண்டு சாறு அரை படி 720 ml ,
- 7.அரசம் பட்டை சாறு அரை படி 720 ml ,
- 8.சிற்றாமணக்கு எண்ணெய் முக்கா படி 1080 ml ,
- 9.நல்லெண்ணெய் முக்கா படி 1080 ml ,
- இவைகளை தைல பாத்திரத்தில் விட்டு அதில் வகைக்கு கழஞ்சு இரண்டு கீழ்கண்ட சரக்குகளை பொடித்து பால்விட்டு அரைத்து சேர்க்கவும்.
- 1.சாதிக்காய் 10 கிராம்,
- 2.சாதிபத்திரி 10 கிராம்,
- 3.மாசிக்காய் 10 கிராம்,
- 4.கற்கடகசிங்கி 10 கிராம்,
- 5.செண்பகப்பூ 10 கிராம்,
- அல்லது (ரோஜா பூ உலர்ந்தது )
- 6.காட்டாத்திப்பூ 10 கிராம்,
- 7.சிறுநாகப்பூ 10 கிராம்,
- 8.ஏல அரிசி 10 கிராம்,
- 9.குரோசாணி ஓமம் 10 கிராம்,
- 10,சித்திர மூல வேர்ப்பட்டை 35 கிராம்,
- அனைத்தையும் சேர்த்துக்கலந்த கல்கத்தை தைலபத்திரத்தில் விட்டு சிறு தீயாக எரித்து வண்டல் மெழுகுபதத்தில் வடித்து பத்திரப்படுத்தவும்.
- தைலத்தில் 2 பலம் (70 கிராம் )கற்கண்டை தூள் செய்து தைலத்தில் கலந்து வைத்துக்கொள்ளவும்.
- சாப்பிடும் முறை :
- வேளைக்கு 1/2 அவுன்ஸ் வீதம் தினம் ஒரு வேளையாக காலையில் சாப்பிட இரண்டு,மூன்று முறை பேதியாகும்.இப்படி இரண்டு அல்லது 3 நாட்கள் கொடுக்கவும்.
- அதன்பிறகு வேளைக்கு 1 to 2 ஸ்பூன் அளவும் காலை உணவிற்கு முன்பு 24, to 48 நாட்கள் சாப்பிட்டுவரலாம்.
- தீரும் நோய்கள் :
- மேகநோய்கள்,
- கிரந்தி,
- சீழ்பிரமேகம்,
- இரத்த பிரமேகம் ,
- வெடிசூலை ,
- மேகரணம்,
- லிங்கப்புற்று,
- யோனிப்புற்று,
- அரிகிரந்தி ,
- மேகப்படைகள் முதலியவைகள் குணமாகும்.
- காரசூடசத்து பற்பம் :
- பொரித்த வெண்காரம் 100 கிராம் ,
- கற்பூர சிலாசத்து பற்பம் 100 கிராம் ,
- இவையிரண்டையும் கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழச்சாற்றால் இரண்டு சாமம் அரைத்து வில்லைத்தட்டி காயவைத்து ,கற்சுண்ணாம்பினால் ஒரு மூசையும் மேல் மூடியும் செய்து அதனுள் மருந்தை அடக்கி மண்சீலை 5,6 (10 to 15 )எருவில் புடமிட்டு எடுத்து கல்வத்திலிட்டரைத்து பத்திரப்படுத்தவும்.
- சாப்பிடும் முறை :
- இதனில் 1,1 1/2,பணவெடை (0.488 mg to 0.732 mg )தேனில் கொடுக்க நீரடைப்பு ,கல்லடைப்பு ,சதையடைப்பு ,நீர்க்கடுப்பு ,கிரிச்சரம் முதலியவை நீங்கும்.
- காரசாரமற்ற இலகு போஜனம் செய்தல் நன்று.
- ரசமணி மோதிரம் செய்முறை :
- அகத்தியர் சிவலிங்க பூஜாவிதி 13.(அகத்தியர் ஞான அமுதம் )
- சுத்திசெய்யாத சங்கு பாஷாணம் 35 கிராம் ,
- சுத்திசெய்யாத ரசம் 35 கிராம்,
- தாமிர டப்பா 140 கிராம் ,
- சங்குபாஷாணம் ரசம் சேர்த்து வேலிப்பருத்தி சாற்றில் 24 நிமிடம் அரைத்து ,பின்னர் கரு ஊமத்தன் சாற்றில் 24 நிமிடம் அரைத்து உடனே தாமிர கிண்ணிகுள் வைத்து மூடி கம்பியால் கட்டி 10 to 15 எருவில் புடமிடவும்,பின்னர் பதங்கத்தை மட்டும் எடுத்து உருக்கி அச்சில் வார்க்கவும். மணியாகவோ,சிலையாகவோ,மோதிரமாகவோ ,காப்பாகவோ செய்து கொள்ளலாம்.
- இதே போல சுத்தி செய்யாத ரேக்கு தாளகம் 35 கிராம்,
- சுத்திசெய்யாத ரசம் 35 கிராம்,
- தாமிர டப்பா 140 கிராம் ,
- சங்குபாஷாணம் ரசம் சேர்த்து எருக்கம் வேரின் பட்டைச் சாற்றில் 24 நிமிடம் அரைத்து உடனே தாமிர கிண்ணிகுள் வைத்து மூடி கம்பியால் கட்டி 10 to 15 எருவில் புடமிடவும்,பின்னர் பதங்கத்தை மட்டும் எடுத்து உருக்கி அச்சில் வார்க்கவும். மணியாகவோ,சிலையாகவோ,மோதிரமாகவோ ,காப்பாகவோ செய்து கொள்ளலாம்.