லிங்க மாத்திரை (நம்நாட்டு வைத்தியம் )
- சுத்தி செய்த லிங்கம் 18 கிராம் ,
- பொரித்த பெருங்காயம் 18 கிராம் ,
- தோலுரித்த வெள்ளைப்பூண்டு 35 கிராம் ,
செய்முறை :
லிங்கம் 20 கிராம் ஒரே கட்டியாக இருக்கவேண்டும் ,அதை பசும்பாலில் 24 மணிநேரம் ஊறவைத்து எடுத்து கழுவி துடைத்து கல்வத்திலிட்டு நன்கு அரைக்கவும்,பின்னர் பெருங்காயம் பொன்வறுவலாக வறுத்து பொடித்து லிங்கத்துடன் சேர்த்து கல்வத்தில் நன்கு அரைக்கவும்.பின்னர் வெள்ளைப்பூண்டு சிறிது சிறிதாக சேர்த்து மெழுகுபதம் வரும்வரை நன்கு அரைக்கவும்.சுமார் 3 மணிநேரம் அரைத்த பின்பு 10 நிமிடம் காற்று படும்படி காய விடவும்.அதன்பிறகு கையில் ஒட்டாது.ஒரு தட்டில் சிறிது நெய் தடவி அதில் குண்டுமணி அளவாக மாத்திரைகளாக அனைத்தையும் உருட்டி போடவும்.2 நாள் நிழலில் காய்தபிறகு புட்டியில் அடைத்து வைத்து கொள்ளவும்.
தீரும் நோய்கள் :
தினம் 3 வேளைகள் உணவிற்கு முன்போ /பின்போ ,ஒரு மாத்திரை வாயில் போட்டு சிறிது தண்ணீர் சாப்பிடவும்.,
- சுவாசகோசத்தில் ஏற்படும் இறைப்பு உடனே குணமாகும்.
- வயிற்றில் தங்கிய வாயு பிரியும்.
- பேதி ,
- சுரம் ,
- இடுப்புவலி ,
- சன்னி ,
- ஜலதோஷம் ,
- தலைவலி,
- வாதசூலை முதலியன குணமாகும்.
குறிப்பு :
வெள்ளைப்பூண்டை தோல் நீக்கி அம்மியிலிட்டு அரைத்து மெல்லிய சீலையில் தடவி நெருப்பனலில் வாட்டிப்பிழிய சாறு கிடைக்கும்,இந்த சாற்றிலும் இந்த மாத்திரையை அரைக்கலாம் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக